சீனாவில் மருத்துவமனையில் கத்தி குத்து: இருவர் பலி- 21 பேர் காயம்
- கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் யுனான் மாகாணத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் கத்தியால் தாக்கியதில் இருவர் கொல்லப்பட்டனர்.
- ஜூலை மாதத்தில் மழலையர் பள்ளியில் நடைபெற்ற கத்திக்குத்தில் மூன்று சிறுவர்கள் உள்பட ஆறுபேர் கொல்லப்பட்டனர்.
சீனாவின் யுனான் மாகாணம் ஜென்ஜியோங் கவுன்டியில் உள்ள உள்ளூர் மருத்துவமனையில் மர்ம நபர் ஒருவர் கண்ணில் தென்பட்டவர்களையெல்லாம் கத்தியால் குத்தி தாக்குதல் நடத்தினார். இதில் இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர். 21 பேர் காயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தாக்குதலில் ஈடுபட்டவர் உள்ளூர் வாலிபர் என விசாரணையில் தெரியவந்துள்ளது. அவரை போலீசார் கைது செய்து செய்துள்ளனர். தாக்குதலுக்கான காரணம் குறித்த தகவல் ஏதும் தெரிவிக்கப்படவில்லை.
சீனாவில் பொதுமக்கள் தனிப்பட்ட முறையில் துப்பாக்கி வைத்திருப்பது சட்டவிரோதமாக பார்க்கப்படுகிறது. கடந்த சில வருடமாக பொது இடங்களில் ஏராளமான கத்தி குத்து சம்பவங்கள் நடைபெற்றுள்ளன.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் யுனான் மாகாணத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் கத்தியால் தாக்கியதில் இருவர் கொல்லப்பட்டனர்.
குவாங்டோங் மாகாணத்தில் ஜூலை மாதத்தில் மழலையர் பள்ளியில் நடைபெற்ற கத்திக்குத்தில் மூன்று சிறுவர்கள் உள்பட ஆறுபேர் கொல்லப்பட்டனர்.
யுனான் மாகாணத்தில் அமைந்துள்ள ஜென்ஜியோங் கவுன்ட்டி 2020 வரைக்கும் வறுமை பிடியில் இருந்ததாக கூறப்படுகிறது.