உலகம்

டிரோன்கள் மூலம் கடும் தாக்குதல் நடத்திய உக்ரைன்: விமான நிலையங்களை மூடிய ரஷியா

Published On 2024-11-10 18:26 GMT   |   Update On 2024-11-10 18:26 GMT
  • உக்ரைன் ராணுவம் 30க்கும் மேற்பட்ட டிரோன்களைக் கொண்டு தாக்குதல் நடத்தியது.
  • பாதுகாப்புக்காக 3 விமான நிலையங்களை மூடியது ரஷியா.

மாஸ்கோ:

உக்ரைன் மீது ரஷியா போர் தொடங்கி இரண்டு ஆண்டுகளைக் கடந்து நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், உக்ரைன் ராணுவம் மொத்தம் 34 டிரோன்களைக் கொண்டு இன்று தாக்குதல் நடத்தியது.

ரஷிய தலைநகர் மாஸ்கோ மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் உள்ள ராமென்ஸ்காய், கொலோமென்ஸ்கி மாவட்டங்களிலும், மாஸ்கோவின் தென்மேற்கே உள்ள டொமோடெடோவோ நகரத்திலும் தாக்குதல் நடத்தப்பட்டது.

இந்த தாக்குதலில் 34 டிரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக ரஷிய ராணுவம் தெரிவித்துள்ளது.

பாதுகாப்பு காரணமாக டொமோடெடோவோ உள்ளிட்ட 3 விமான நிலையங்கள் மூடப்பட்டு கடும் கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டன.

இதேபோல், மாஸ்கோ தவிர பிற பகுதிகளிலும் தாக்குதல் நடத்திய டிரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டது என ரஷியா தெரிவித்துள்ளது.

ரஷியா மீது உக்ரைன் நடத்திய மிகப் பெரிய தாக்குதலாக இது கருதப்படுகிறது.

Tags:    

Similar News