உலகம்

பிரிட்டன் பாராளுமன்ற தேர்தல்: தமிழ் வம்சாவளியை சேர்ந்த உமா குமரன் வெற்றி

Published On 2024-07-05 08:56 GMT   |   Update On 2024-07-05 08:56 GMT
  • பிரிட்டன் பாராளுமன்ற தேர்தலில் இந்த முறை எட்டு தமிழர்கள் களம் கண்டனர்.
  • இதில் தொழிலாளர் கட்சி சார்பில் ஸ்டராட்போர்டு தொகுதியில் உமா குமரன் போட்டியிட்டார்.

லண்டன்:

பிரிட்டன் பாராளுமன்ற தேர்தலில் தொழிலாளர் கட்சி வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது. மொத்தமுள்ள 650 இடங்களில் தொழிலாளர் கட்சி 410 இடங்களிலும், ரிஷி சுனக்கின் கன்சர்வேட்டிவ் கட்சி 119 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. பிற கட்சிகள் 112 இடங்களில் வெற்றி பெற்றுள்ளன.

பிரிட்டன் பாராளுமன்ற தேர்தலில் உமா குமரன், கவின் ஹரன், மயூரன் செந்தில்நாதன், கமலா குகன், டெவினா பால், நரணி ருத்ரா ராஜன், கிரிஷ்ணி, ஜாஹிர் உசேன் என மொத்தம் 8 தமிழர்கள் வேட்பாளர்களாக போட்டியிட்டனர்.

இந்நிலையில், பிரிட்டன் பாராளுமன்ற தேர்தலில் தொழிலாளர் கட்சி சார்பில் தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த உமா குமரன், லண்டன் ஸ்டராட்போர்டு தொகுதியில் போட்டியிட்டார்.

இந்தத் தொகுதியில் 19,145 வாக்குகள் பெற்று வெற்றியைப் பதிவுசெய்துள்ளார் உமா குமரன். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட கன்சர்வேட்டிவ் கட்சி வேட்பாளரான கேன் பிளாக்வெல் 3,144 வாக்குகள் மட்டும் பெற்று 4-வது இடம் பெற்றார்.

ஈழத் தமிழ்ப் பெண்ணான உமா குமரன் பிரிட்டன் வரலாற்றில் முதல் தமிழ் எம்.பி. ஆவார். இவரது குடும்பம் இலங்கையில் ஏற்பட்ட உள்நாட்டுப் போருக்கு பின் இங்கிலாந்துக்கு குடிபெயர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News