உலகம்
உக்ரைனில் அமைதி திரும்ப வலியுறுத்தி ஐ.நா.சபை தீர்மானம் - இந்தியா புறக்கணிப்பு
- ஐ.நா.சபை தீர்மானத்திற்கு ஆதரவாக 141 உறுப்பினர்கள் வாக்களித்தனர்.
- இந்தத் தீர்மானத்தில் சீனா, இந்தியா உள்பட 32 உறுப்பினர்கள் வாக்களிக்கவில்லை.
நியூயார்க்:
உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து ஒரு ஆண்டு நிறைவடைந்துள்ளது.
இந்நிலையில், உக்ரைனில் நீடித்த அமைதி திரும்ப வேண்டும் என்பதை வலியுறுத்தி ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
உக்ரைனில் விரிவான, நியாயமான மற்றும் நீடித்த அமைதியை அடைவதன் அவசியம் குறித்த தீர்மானத்தை நிறைவேற்றியது.
ஐ.நா.சபை தீர்மானத்திற்கு ஆதரவாக 141 உறுப்பினர்கள் வாக்களித்தனர். இதை எதிர்த்து 7 பேரும் வாக்களித்தனர்.
இந்தத் தீர்மானத்தின் மீது சீனா, இந்தியா உள்பட 32 உறுப்பினர்கள் வாக்களிக்கவில்லை.