உலகம்

அமெரிக்க அதிபர் தேர்தல்: 3 மாகாணங்களில் முடிவு அறிவிப்பு- டிரம்ப் முன்னிலை

Published On 2024-11-06 00:57 GMT   |   Update On 2024-11-06 02:17 GMT
  • இரண்டு மாகாணங்களில் டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றுள்ளார்.
  • குடியரசு கட்சிக்கு சாதகமான வெர்மொன்ட் மாகாணத்தில் கமலா ஹாரிஸ் வெற்றி

அமெரிக்க அதிபர் தேர்தல் இந்திய நேரப்படி நேற்று மாலை 5.30 மணிக்கு தொடங்கியது. இன்று அதிகாலை 5.30 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவடைந்தது. வாக்குப்பதிவு நிறைவடைந்ததும் உடனடியாக வாக்குகள் எண்ணும் பணி தொடங்கின.

தொடக்க சுற்றுகள் முடிவில் டொனால்டு டிரம்ப் முன்னிலை பெற்றுள்ளார்.

இண்டியானா மாகாணாத்தில் டொனால்டு டிரம்ப் அதிகாரப்பூர்வமாக வெற்றி பெற்றுள்ளார். அந்த மாகாணத்தில் 11 எல்க்டரல் காலேஜ் வாக்குகள் உள்ளன. இது டிரம்பிற்கு முழுமையாக வந்து சேரும். இண்டியானா மாகாணம் குடியரசு கட்சிக்கு சாதகமானதாகும்.

அதேபோல் கென்டக்கி மாகாணத்திலும் டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றுள்ளார். இங்கு அவர் 3-வது முறையாக ஆதிக்கம் செலுத்தியுள்ளார். இங்கு 8 எலக்ட்ரல் காலேஜ் வாக்குகள் உள்ளது.

 வெர்மொன்ட் மாகாணத்தில் ஜனநாயக கட்சி வேட்பாளரான கமலா ஹாரிஸ் வெற்றி பெற்றுள்ளார். இந்த மாகாணத்தில்  இதற்கு முன்னதாக குடியரசு கட்சிக்கு சார்பாக வாக்களித்து வந்தது. தற்போது ஜனநாயக கட்சி வேட்பாளரான கமலா ஹாரிஸ்க்கு ஆதரவாக வாக்களித்துள்ளது.

மேலும் 4 மாகாணத்தில் டிரம்ப் முன்னிலை பெற்று வரும் நிலையில், கமலா ஹாரிஸ் ஒரு மாகாணத்தில் முன்னிலை பெற்று வருகிறார்.

Similar News