உலகம்
40 எலக்டோரல் வாக்குகளை கொண்ட டெக்சாஸ் மாகாணத்தில் டொனால்டு டிரம்ப் வெற்றி
- டொனால்டு டிரம்ப் 41,33,755 (54.4 சதவீதம்) வாக்குகள் பெற்றார்.
- கமலா ஹாரிஸ் 33, 80,534 (44.5 சதவீதம்) வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார்.
அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இந்திய நேரப்படி இன்று காலை 5.30 மணிக்கு முடிவடைந்த நிலையில் உடனடியாக வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.
வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்து டொனால்டு டிரம்ப் முன்னிலை பெற்று வருகிறார். அதிக எலக்டோரல் வாக்குகள் கொண்ட டெக்சாஸ் மாகாணத்தில் டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றுள்ளார்.
டொனால்டு டிரம்ப் 41,33,755 (54.4 சதவீதம்), 33, 80,534 (44.5 சதவீதம்) வாக்குகளும் பெற்றனர். காலை 8 மணி நிலவரப்படி டொனால்டு டிரம்ப் 178 வாக்குகள் பெற்று முன்னிலைப் பெற்றுள்ளார். கமலா ஹாரிஸ் 99 வாக்குகள் பெற்று பின்தங்கி வருகிறார்.