உலகம்

இந்தியாவுடன் நல்லுறவு வேண்டும், ஆனால் அது இப்படி இருக்க வேண்டும் - வங்கதேச தலைமை ஆலோசகர் யூனுஸ்

Published On 2024-09-11 15:35 GMT   |   Update On 2024-09-11 15:35 GMT
  • ஜனநாயக நாடாக உலகம் அங்கீகரிக்க வேண்டும் என்று விரும்புகிறோம்.
  • முக்கிய துறைகளில் மாற்றம் கொண்டுவர கமிஷன்களை அமைக்க இடைக்கால அரசு நடவடிக்கை.

வங்கதேசம் நாட்டிற்கான தலைமை ஆலோசகர் டாக்டர் முகமது யூனுஸ், தனது நாடு இந்தியா மற்றும் பிற அண்டை நாடுகளுடன் நல்லுறவை விரும்புகிறது, ஆனால் அது "நியாயம் மற்றும் சமத்துவத்தின்" அடிப்படையில் இருக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

தொலைக்காட்சியில் உரையாற்றிய முகமது யூனுஸ், "யூனுஸ் நிர்வாக தலைவராக பதவியேற்ற பிறகு, இந்திய பிரதமர் நரேந்திர மோடி, பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் உட்பட பல வெளிநாட்டு தலைவர்கள் தொலைபேசியில் அவரை வாழ்த்தினார்கள்."

"நாங்கள் இந்தியா மற்றும் பிற அண்டை நாடுகளுடன் நல்ல உறவை விரும்புகிறோம், ஆனால் அந்த உறவுகள் நியாயம் மற்றும் சமத்துவத்தின் அடிப்படையில் இருக்க வேண்டும். தெற்காசியாவில் பிராந்திய ஒத்துழைப்பை மேம்படுத்த சார்க் அமைப்புக்கு புத்துயிர் அளிக்கவும் நான் முன்முயற்சி எடுத்துள்ளேன்," என்று அவர் கூறினார்.

சார்க் அமைப்பில் ஆப்கானிஸ்தான், வங்கதேசம், பூடான், இந்தியா, மாலத்தீவுகள், நேபாளம், பாகிஸ்தான் மற்றும் இலங்கை ஆகிய நாடுகள் உள்ளன. வங்கதேசத்தை மரியாதைக்குரிய ஜனநாயக நாடாக உலகம் அங்கீகரிக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்.

வங்கதேசத்தை சீர்திருத்தும் முயற்சியில், தேர்தல் முறை உட்பட ஆறு முக்கிய துறைகளில் மாற்றங்களை கொண்டுவர ஆறு கமிஷன்களை அமைக்க இடைக்கால அரசு நடவடிக்கை எடுத்துள்ளதாக யூனுஸ் கூறினார்.

Tags:    

Similar News