உலகம் (World)

இந்தியா வரம்! ஈரான் சாபம்! ஐ.நா.வில் உலக வரைபடத்துடன் இஸ்ரேல் பிரதமர் உரை.. அப்போ பாலஸ்தீனம்?

Published On 2024-09-28 15:10 GMT   |   Update On 2024-09-28 15:10 GMT
  • ஈரான், ஈராக், சிரியா, ஏன் ஆகியன மீது கருப்பு நிறம் தீட்டப்பட்டு இருந்தது.
  • பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்பத் துறைகளில் இஸ்ரேல் -இந்தியா உறவு வலுப்பெற்றுள்ளது.

பாலஸ்தீனம் மீது கடந்த 10 மாதகங்களுக்கும் மேலாக இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதலில் இதுவரை 43,000 திற்கும்அதிகமான பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர். 96,210 மக்கள் படுகாயம் அடைந்துள்ளனர். இந்த போரை உலக நாடுகளும் ஐநாவும் தடுத்து நிறுத்த முயற்சித்தும் இஸ்ரேல் தாக்குதலை நிறுத்துவதாக இல்லை. கடந்த ஒரு வாரத்தில் அளிப்பதாக லெபனான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஹிஸ்புல்லாவினருடன் பொதுமக்களும் உயிரிழந்துள்ளனர். பலி எண்ணிக்கை 700 ஐ தாண்டியுள்ளதால் மேலும் ஒரு போர் மூலம் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்றைய தினம் அமெரிக்காவின் நியூ யார்க்கில் நடைபெற்ற ஐநா பொதுக்குழு கூட்டத்தில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு தங்களது செயல்களை நியாயப்படுத்தி உரையாற்றினார். அப்போது தனது கைகளில் இரண்டு வரைபடத்தை ஏந்தி நேதன்யாகு தங்களுக்கு பிடித்த மற்றும் பிடிக்காத நாடுகளை வகைப்படுத்தியுள்ளார். நேதன்யாகு தனது வலது கையில் ஏந்தியிருந்த உலக வரைபடத்தில் வரைபடத்தில் மத்திய கிழக்கு நாடுகளான ஈரான், ஈராக், சிரியா, ஏன் ஆகியன மீது கருப்பு நிறம் தீட்டப்பட்டு இருந்தது. இந்த நாடுகள் சாபத்தை குறிப்பதாக அவர் தெரிவித்தார்.

மேலும் அவரது வலது கையில் ஏந்தியிருந்த உலக வரைபடத்தில் வரைபடத்தில் இந்தியா, எகிப்து, சூடான், சவூதி அரேபியா ஆகிய நாடுகள் பச்சை வண்ணத்தில் இடம்பெற்றிருந்தன.இந்த நாடுகள் தங்களுக்குக் கிடைத்த வரமாக உள்ளதாக நேதன்யாகு குறிப்பிட்டார். நேதன்யாகு இவ்வாறு நாடுகளை வகைப்படுத்த வெவ்வேறு காரணங்கள் உள்ளன. இந்தியாவை வரம் என்று நேதன்யாகு குறிப்பிடுவதற்குப் பிரதமர் மோடியின் அரசின் கீழ் இஸ்ரேல் - இந்தியா நட்புறவும் பொருளாதார உறவும் வலுப்பெற்றுள்ளதே காரணம் என்று அரசியல் வல்லுநர்கள் கூறுகின்றனர்.

குறிப்பாகப் பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்பத் துறைகளில் இருநாடுகளின் உறவு அதிகரித்துள்ளது. முன்னதாக ஆரமப காலங்களில் பாலஸ்தீனத்தின் தனி நாடு கோரிக்கையை இந்தியா ஆதரித்து வந்திருந்தாலும், தற்போது பாலஸ்தீனத்துக்கு எதிரான தாக்குதலை இஸ்ரேல் நிறுத்த வேண்டும் என்று ஐநா கொண்டுவந்த எந்த தீர்மானத்தின் மீதும் இந்தியா வாக்களிக்க மறுத்து வருகிறது. இதற்கிடையே இன்றைய தினம் ஐநாவில் நேதன்யாகு காட்டிய வரம், சாபம் ஆகிய இரண்டு உலக வரைபடத்திலும் பாலஸ்தீன் என்ற நாடு இடம்பெறவில்லை என்பது கவனிக்கத்தக்கது. 

 

Tags:    

Similar News