உலகம் (World)

அதிபர் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கேவுக்கு எதிர்க்கட்சி எம்.பி.க்கள் ஆதரவு

Published On 2024-07-31 16:28 GMT   |   Update On 2024-07-31 16:28 GMT
  • ஸ்ரீ லங்கா விடுதலை கட்சி ஆதரவு அளிப்பதாக தெரிவித்துள்ளது.
  • ராஜபக்சே கட்சியை சேர்ந்த 90 எம்.பி.க்கள் ஆதரவு கொடுக்க முடிவு செய்துள்ளனர்.

இலங்கையில் செப்டம்பர் மாதம் 21-ந்தேதி அதிபர் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலில் தற்போது அதிபராக இருக்கும் ரணில் விக்ரமசிங்கே போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து இன்னும் சிலர் போட்டியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் இலங்கையில் ரணில் விக்ரமசிங்கே கட்சிக்கு முக்கிய எதிர்க்கட்சியாக விளங்கும் ஸ்ரீ லங்கா மக்கள் முன்னணி (SLLP) கட்சியை சேர்ந்த எம்.பி.க்கள் ஆதரவு அளிப்பதாக தெரிவித்துள்ளனர்.

அதேவேளையில் கோஷ்டி மோதல் நிறைந்த ஸ்ரீ லங்கா விடுதலை கட்சியும் (SLFP) ஆதரவு அளிப்பதாக தெரிவித்துள்ளது. இன்று மாலை அதிபர் விக்ரமசிங்கேவை எஸ்.எல்.எஃப்.பி. மத்தியக்குழு உறுப்பினர்கள் சந்தித்து பேசினார். அப்போது தங்களுடைய அசைக்க முடியாத ஆதரவை தெரிவித்தனர். இந்த தகவலை அதிபர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

ராஜபக்சே குடும்பம் எஸ்.எல்.எல்.பி. கட்சியை நடத்தி வரும் நிலையில் சுமார் 90 எம்.பி.க்கள் ரணில் விக்ரமசிங்கேவை மீண்டும் அதிபராக தேர்ந்தெடுக்க ஆதரவு கொடுக்க முடிவு செய்தனர். அதேவேளையில் கட்சி அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் எனத் தெரிவித்துள்ளது. அதிபர் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கேவுக்கு ஆதரவு இல்லை எனவும், கட்சி சார்பில் சொந்த வேட்பாளர் நிறுத்தப்படுவார் எனவும் நேற்று எஸ்.எல்.எல்.பி. முடிவு செய்திருந்தது.

எஸ்.எல்.எஃப்.பி கட்சி இலங்கையின் மிகப்பெரிய 2-வது கட்சியாக திகழ்ந்தது. யார் கட்டுப்பாட்டில் கட்சி என்ற கோஷ்டி மோதல் காரணமாக சட்டப்போராட்டத்தை எதிர்கொண்டு வருகிறது.

ரணில் விக்ரமசிங்கே மந்தரி சபையில் எஸ்எல்பிபி கட்சி உள்ளது. எஸ்.எல்.எஃப்.பி கட்சியின் இரண்டு பேர் மந்திரிகளாக உள்ளனர். 2015-ல் இருந்து மைதிரிபாலா ஸ்ரீசுனா இந்த கட்சியின் தலைவராக இருந்தார். ஏப்ரல் மாதம் நீதிமன்றம் அதற்கு தடைவிதித்தது. விமானப் போக்குவரத்துத்துறை மந்திரி நிமமல் ஸ்ரீபாலா டி சில்வா தற்போது கட்சியின் தலைவராக உள்ளார்.

ரணில் விக்ரமசிங்கே தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளார். இதனால் மற்ற கட்சிகளின் ஆதரவை பெற முயற்சி செய்து வருகிறார்.

Tags:    

Similar News