உலகம் (World)

சாப்ஸ்டிக்ஸ்-ல் அரிசியை சாப்பிட்டு உலக சாதனை படைத்த பெண்- வீடியோ

Published On 2024-09-30 04:43 GMT   |   Update On 2024-09-30 04:43 GMT
  • சாப்ஸ்டிக்ஸை பயன்படுத்துவது எளிதாகத் தோன்றலாம்.
  • தானியங்களை சாப்ஸ்டிக்ஸ் கொண்டு சாப்பிடுவது கடினமான காரியம்.

சீனா, ஜப்பான் போன்ற நாடுகளில் நூடுல்ஸ் மற்றும் வழக்கமான உணவுகளை சாப்பிட கைக்குப் பதிலாக பயன்படுத்தும் ஒரு பற்றுக்குச்சிகள் தான் சாப்ஸ்டிக்ஸ் என்று அழைக்கப்படுகிறது.

சாப்ஸ்டிக்ஸை பயன்படுத்துவது எளிதாகத் தோன்றலாம், ஆனால் இதனை சரியாக பயன்படுத்த நிறைய பயிற்சியும் பொறுமையும் தேவை.

சாப்ஸ்டிக்ஸை கொண்டு உணவு சாப்பிடுவதற்கே அதிக பயிற்சி தேவையென்றால் வங்கதேசத்தை சேர்ந்த சுமயா கான் சாப்ஸ்டிக்ஸை பயன்படுத்தி அரிசியை சாப்பிட்டு கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.

தானியங்களை சாப்ஸ்டிக்ஸ் கொண்டு சாப்பிடுவது கடினமான காரியம். வங்கதேசத்தை சேர்ந்த சுமயா கான் என்ற பெண், சாப்ஸ்டிக்ஸ் மூலம் அரிசியை எடுத்து சாப்பிடும் சவாலான பணியை மேற்கொண்டார். அவர் சாப்ஸ்டிக்ஸை பயன்படுத்தி ஒரு நிமிடத்தில் 37 அரிசியை சாப்பிட்டு கின்னஸ் உலக சாதனை படைத்தார்.

அவரது இந்த சாதனை வீடியோவை கின்னஸ் உலக சாதனை நிறுவனம் இன்ஸ்டாகிராமில் சமீபத்தில் வெளியிட்டுள்ளது.

Tags:    

Similar News