செய்திகள்

பெரியபாளையம் திரிபுரசுந்தரி திருவாளீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்

Published On 2018-08-25 08:02 GMT   |   Update On 2018-08-25 08:02 GMT
திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியம் பெரியபாளையம் அருகே உள்ள நெய்வேலியில் திரிபுர சுந்தரி அம்மன் சமேத திருவாளீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியம் பெரியபாளையம் அருகே உள்ள நெய்வேலியில் திரிபுர சுந்தரி அம்மன் சமேத திருவாளீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில் நூறு ஆண்டுகள் பழமை வாழ்ந்தது ஆகும்.

கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு இக்கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. இந்நிலையில் கோவிலை கிராம பொதுமக்கள் சீரமைத்து புதுப்பித்தனர். மேலும் ஸ்ரீகற்பக விநாயக ருக்கு கோபுரம் அமைத்தனர்.

ஸ்ரீபாலமுருகன், ஸ்ரீநவ கிரக மூர்த்திகளையும் புதுப்பித்தனர். நேற்று காலை புனித நீர் அடங்கிய கலசங்களை பட்டப்பா, குட்டி சிவாச்சாரியார்கள் சுமந்த வண்ணம் கோவிலை வலம் வந்தனர்.

காலை 8.30 மணியளவில் கோபுர கலசம், மூலவர், பரிவார மூர்த்திகள் நவகிரகம் உள்ளிட்ட வைகளுக்கு ஒரே நேரத்தில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர். பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

இன்று முதல் 48 நாட்கள் தொடர்ந்து மண்டலா பிஷேகம் நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை கிராம மக்கள் செய்திருந்தனர். ஸ்ரீசோலையம்மன்- குழந்தையம்மன் திருக்கோவிலில் திருவாச்சி திருவிழா இன்று மாலை துவங்கி 31-ந்தேதி வரை 7 நாட்கள் நடைபெறுகிறது.
Tags:    

Similar News