புதுச்சேரி

கோப்பு படம்.

பணி நிரந்தரம் கோரி 108 ஆம்புலன்ஸ் டிரைவர்கள் போராட்டம் நடத்த முடிவு

Published On 2023-08-24 08:15 GMT   |   Update On 2023-08-24 08:15 GMT
  • தலைமை அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம் நடத்துவது என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
  • துணை தலைவர்கள் முனுசசாமி, ஆனந்தன், செயலாளர்கள் ராஜகோபால், ரோலண்ட் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

புதுச்சேரி:

புதுவை, காரைக்கால், ஏனாம் அரசு சுகாதாரத்துறை 108 ஆம்புலன்ஸ் டிரைவர்கள் செயற்குழு கூட்டம் நடந்தது.

கூட்டத்தில் கவுரவ தலைவர் சேஷாச்சலம் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார். சங்க தவைர் புருஷோத்தமன் தலைமை வகித்தார். பொதுச்செயலாளர் முருகன், பொருளாளர் லூர்துமரியநாதன், துணை பொருளாளர் பெரியசாமி, துணை தலைவர்கள் முனுசசாமி, ஆனந்தன், செயலாளர்கள் ராஜகோபால், ரோலண்ட் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில், 108 ஆம்புலன்ஸ் டிரைவர்களின் பணிநிரந்தரம், சம்பள உயர்வு உட்பட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்துவது, போராட்டத்துக்கு கவர்னர், முதலமைச்சர் தீர்வு காணாவிட்டால் ஒரு நாள் பணி புறக்கணிப்பு செய்து சுகாதாரத்துறை தலைமை அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம் நடத்துவது என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

இந்த தீர்மானத்தின்படி வரும் செப்டம்பர் 4ம் தேதி சுகாதாரத்துறை தலைமை அலுவலகம் முற்றுகை, 11ம் தேதி வரை கோரிக்கை அட்டை அணிந்து பணியாற்றுதல், 11ம் தேதி பணி புறக்கணிப்பு போராட்டம் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது.

Tags:    

Similar News