புதுச்சேரி

கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட போலி செல்போன்கள்.

போலி செல்போன் விற்பனையில் பல மாநில குற்றவாளிகளுக்கு தொடர்பு

Published On 2023-08-25 08:53 GMT   |   Update On 2023-08-25 08:53 GMT
  • போலீஸ் விசாரணையில் திடுக்கிடும் தகவல்
  • டெல்லி, மும்பை நகரங்களுக்கு சென்றபோது நட்பு ஏற்பட்டுள்ளது.

புதுச்சேரி:

புதுவை அண்ணா சாலை யில் உள்ள செல்போன் கடைக்கு சில நாட்களுக்கு முன் 2 பேர் வந்தனர்.

கடைக்காரரிடம் ரூ.1 லட்சம் மதிப்புள்ள ஐபோன்களை குறைவான விலையில் தருவதாக தெரிவித்தனர். சந்தேக மடைந்த கடைக்காரர் செல்போன் பெட்டியை திறந்துபார்த்தபோது சீனா தயாரிப்பு போனை வைத்திருந்தது தெரியவந்தது.

கடைக்காரர் ஒருவரை மட்டும் பிடித்து போலீசில் ஒப்படைத்தார். மற்றொருவர் தப்பி ஓடிவிட்டார். விசா ரணையில் பிடிபட்டவர், கேரளா மாநிலம் பாலக்காடை சேர்ந்த உமரூல் பரூக்(28) என தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்து செல்போன், மோட்டார்சைக்கிளை பறிமுதல் செய்தனர்.

அவரிடம் நடத்திய விசா ரணையின் அடிப்படையில் தப்பியோடிய பாலக்காடை சேர்ந்த முகமது ஷூஹைப்பு(26), அவரின் நண்பர்கள் உத்திரபிர தேசத்தை சேர்ந்த முசையித் (30), டாலிப் சவுத்ரி, ஜிஸ்அன் சௌத்ரி, காஷிப் ஆகியோரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதில் உமர்பாரூக், காஷூப், ஷூஹைப்பு ஆகியோரை போலீசார் 3 நாள் காவலில் எடுத்து விசாரித்தனர்.

விசாரணையில், அனைவரும் ஜவுளி உட்பட பல்வேறு வியாபாரங்களில் ஈடுபட்டு வந்தனர். டெல்லி, மும்பை நகரங்களுக்கு சென்றபோது நட்பு ஏற்பட்டுள்ளது.

அப்போது போலி செல்போன்களை ஐபோன் எனக்கூறி வியாபாரம் செய்ய திட்டமிட்டனர். அதன்படி தமிழகம் உட்பட பல இடங்களில் மோசடியில் இறங்கியது தெரியவந்தது.

இந்த வழக்கில் மேலும் பல மாநிலங்களை சேர்ந்தவர்களுக்கு தொடர்பு இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர்கள் தகவலின்பேரில் பதுக்கி வைத்திருந்த ரூ.5 லட்சம் மதிப்புள்ள 10 போலி ஐபோன், 35 போலி ஐபோன் ஏர்பாட், 15 போலி புளூடூத் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

போலீஸ் விசாரணைக்கு பின் குற்றவாளிகள் மீண்டும் சிறையில் அடைக்கப் பட்டனர். இவ்வழக்கில் தொடர்புடைய மற்ற குற்றவாளிகளையும் கைது செய்ய போலீசார் விசா ரணையை முடுக்கி விட்டுள்ளனர்.

Tags:    

Similar News