புதுச்சேரி
கிறிஸ்துமஸ்-புத்தாண்டு பேஷன்ஷோ: உள்ளூர் தயாரிப்பு ஆடைகளில் அசத்திய பெண்கள்
- மிஷின் வீதியில் உள்ள காசாபிலங்கா வணிக வளாகத்தில் பேஷன் ஷோ நடந்தது.
- ஆரோவில் பகுதி வாசிகளும் சுற்றுலா பயணிகளும் ஆர்வத்துடன் கண்டுகளித்தனர்.
புதுச்சேரி:
புதுச்சேரியை அடுத்த தமிழக பகுதியான ஆரோவில்லில் கிராமப்புற பெண்கள் மற்றும் வெளி நாட்டவர்கள் முயற்சியால் விதவிதமான ஆடைகள் தயாரிக்கப்படுகின்றன.
இந்த நவீன ஆடைகளை அறிமுகப்படுத்தும் விதமாக புதுவை மிஷின் வீதியில் உள்ள காசாபிலங்கா வணிக வளாகத்தில் பேஷன் ஷோ நடந்தது.
இதில் 20-க்கும் மேற்பட்ட இளம் பெண்களும், இளைஞர்களும் விதவிதமான ஆடை மற்றும் அணி கலன்களை அணிந்து ஸ்டைலாக நடந்து வந்தனர்.
இதனை ஆரோவில் பகுதி வாசிகளும் சுற்றுலா பயணிகளும் ஆர்வத்துடன் கண்டுகளித்தனர்.
கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை வரவேற்கும் விதமாக பேஷன் ஷோ நடத்தப்பட்டதாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.