புதுச்சேரி
காலாவதி பீர்பாட்டில் விற்பனை: ரூ.75 ஆயிரம் இழப்பீடு வழங்க நுகர்வோர் கோர்ட்டு உத்தரவு
- உணவு பாதுகாப்பு துறையில் பீர்பாட்டில்களை கொடுத்து சோதனை செய்தார்.
- தனியார் மதுபான விற்பனையாளர், தயாரிப்பு நிறுவனத்தின் மீது நஷ்டஈடு கோரி வழக்கு தொடர்ந்தார்.
புதுச்சேரி:
புதுவை வேல்ராம்பட்டை சேர்ந்தவர் பீமாராவ். இவர் கடந்த 2021-ம் ஆண்டு லாஸ்பேட்டை கொட்டுப் பாளையத்தில் உள்ள தனியார் மதுக்கடையில் 6 பீர் பாட்டில் வாங்கினார்.
அதில் 2 பாட்டில் காலாவதியாக இருந்தது. இதையடுத்து உணவு பாதுகாப்பு துறையில் பீர்பாட்டில்களை கொடுத்து சோதனை செய்தார்.
சோதனை முடிவில் புதுவை மாவட்ட நுகர்வோர் தீர்வு ஆணையத்தில் மனு தாக்கல் செய்து, தனியார் மதுபான விற்பனையாளர், தயாரிப்பு நிறுவனத்தின் மீது நஷ்டஈடு கோரி வழக்கு தொடர்ந்தார்.
வழக்கை விசாரித்த மாவட்ட நுகர்வோர் குறைதீர்வு அமர்வு தலைவர் முத்துவேல், உறுப்பினர்கள் சுவிதா, ஆறுமுகம் ஆகியோர், மதுபான கடை ரூ.75 ஆயிரத்து 240 இழப்பீடு வழங்க வேண்டும் என உத்தரவிட்டனர்.