புதுச்சேரி

முத்தியால்பேட்டையில் கோவிலையொட்டியுள்ள மதுக்கடை.

கோவில் அருகே மதுக்கடையால் பக்தர்கள் முகம் சுளிப்பு

Published On 2023-07-27 08:18 GMT   |   Update On 2023-07-27 08:18 GMT
  • அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
  • முத்தியால் பேட்டை பகுதியில் கோவில் வளாகத்தையொட்டியும், கோவில் எதிரிலேயேயும் மதுக்கடைகள் இயங்கி வருகின்றன.

புதுச்சேரி:

வழிபாட்டு தலங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் அருகே மதுக்கடைகள் இயங்கக்கூடாது என்று விதி உள்ளது.

தமிழகத்தில் அந்த விதி முறைகள் கடைப்பிடிக்கப் படுகிறது. வழிபாட்டு தலங்கள் மட்டுமின்றி தேசிய நெடுஞ்சாலைகளிலும் மதுக்கடைகள் வைக்க அனுமதிக்கப்படுவதில்லை. டாஸ்மாக் மதுக்கடைகள் ஊருக்கு ஒதுக்குப்புறத்தில் இயங்குகின்றன.

ஆனால் புதுவையில் தடுக்கி விழுந்தால் மதுக்கடை என்ற அளவில் உள்ளது. புதுவையில் மட்டும் 400-க்கும் மேற்பட்ட மதுக்கடைகள் உள்ளன. மேலும் கல்வி நிறுவ னங்கள் மட்டும் வழிபாட்டு தலங்கள் அருகிலேயே சில மதுக்கடைகள் செயல்படு கின்றன.

குறிப்பாக முத்தியால் பேட்டை பகுதியில் கோவில் வளாகத்தையொட்டியும், கோவில் எதிரிலேயேயும் மதுக்கடைகள் இயங்கி வருகின்றன.

இந்த மதுக்கடைகளில் மது அருந்துபவர்கள் போதையில் தன்னையே மறந்து அலங்கோலமாக படுத்து கிடக்கின்றனர். இதனால் கோவிலுக்கு தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் முகம் சுளித்து செல்கின்றனர்.

அதோடு மது போதையில் ஒருவரை ஒருவர் பாட்டில் மற்றும் ஆயுதங்களால் தாக்கி கொள்வதால் அவ்வழியே செல்லும் பொதுமக்கள் அலறி அடித்து செல்லும் நிலை ஏற்படுகிறது.

மது பிரியர்கள் பொது இடத்தில் நின்று அருவருக்கத்தக்க வார்த்தைகளால் பேசி சண்டை போட்டு

கொள்வதால் போக்கு வரத்தும் பாதிப்பு ஏற்படுகிறது.

புதுவை அரசுக்கு அதிக வருவாய் ஈட்டி தருவது மதுக்கடைகள் என்றாலும் வரைமுறைக்குட்பட்டு மதுக்கடைகள் இயங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பொது மக்களின் கோரிக்கையாக உள்ளது.

Tags:    

Similar News