அரசு மகளிர் பொறியியல் கல்லூரியில்லேட்ரல் என்ட்ரிக்கு விண்ணப்பிக்கலாம்
- எலக்ட்ரிக்கல் எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரானிகஸ் கம்யூனிகேஷ், பிகாம் பட்டப்படிப்புகளை வழங்குகிறது.
- கூடுதலாக பிடெக் இன்பர்மேஷன் என்ஜினியரிங் படிப்பு இந்த கல்வியாண்டில் தொடங்கப்பட உள்ளது.
புதுச்சேரி:
புதுவை அரசு மகளிர் பொறியியல் கல்லூரி முதல்வர் ராணி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-
புதுவை அரசு 2022-23ம் கல்வியாண்டில் பாலிடெக்னிக் கல்லூரியை மகளிர் பொறியியல் கல்லூரியாக தரம் உயர்த்தியது. புதுவை லாஸ்பேட்டையில் இயங்கி வரும் கல்லூரியில் பிடெக் ஆர்க்கிடெக், கம்யூட்டர் சயின்ஸ், எலக்ட்ரிக்கல் எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரானிகஸ் கம்யூனிகேஷ், பிகாம் பட்டப்படிப்புகளை வழங்குகிறது.
இந்த 5 படிப்புகளுக்கும் 2-ம் ஆண்டு லேட்ரல் என்ட்ரியில் சேர டிப்ளமோ முடித்த மாணவிகள் சென்டாக் மூலம் விண்ணப்பிக்கலாம். கூடுதலாக பிடெக் இன்பர்மேஷன் என்ஜினியரிங் படிப்பு இந்த கல்வியாண்டில் தொடங்கப்பட உள்ளது.
வரும் கல்வியாண்டுக்கும் சென்டாக் மூலம் மாணவிகள் கல்லூரியில் சேர விண்ணப்பிக்கலாம். மேலும் தகவல்களுக்கு கல்லூரி உதவி மையம், இணையதளத்தை அணுகலாம்
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.