தனியார் தோல் தொழிற்சாலையில் வருமான வரித்துறை சோதனை
- பல்வேறு வெளிநாடுகளுக்கும் தோல் பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
- ஆவணங்களை வருமான வரித்துறையினர் கைப்பற்றியுள்ளதாக கூறப்படுகிறது.
புதுச்சேரி:
புதுச்சேரி அடுத்த ஓதியம்பட்டு பகுதியை தலைமையிடமாக கொண்டு தனியார் தோல் தொழிற்சாலை இயங்கி வருகிறது.
இங்கு தயாரிக்கபடும் பொருட்கள் அரியாங்குப்பம், மிஷன் வீதியில் உள்ள வணிக நிறுவனங்களின் விற்பனை செய்யபட்டு வருகிறது. பல்வேறு வெளிநாடுகளுக்கும் தோல் பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
இந்த நிலையில் சென்னையில் இருந்து வந்த 20 பேர் அடங்கிய வருமானவரித்துறை அதிகாரிகள் இன்று புதுச்சேரிக்கு வந்தனர். ஒரே நேரத்தில் 3 குழுக்களாக பிரிந்து, தோல் தொழிற்சாலை மற்றும் விற்பனையகத்தில் சோதனை நடத்தி வருகின்றனர்.
வரி ஏய்ப்பு காரணமாக வந்த புகாரின் அடிப்படையில் இந்த சோதனை நடந்து வருகிறது. இதில் பல்வேறு ஆவணங்களை வருமான வரித்துறையினர் கைப்பற்றியுள்ளதாக கூறப்படுகிறது.
தொடர்ந்து வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் அடிப்படையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.