புதுச்சேரி
கொள்முதல் விலையை உயர்த்தக்கோரி பாலை தரையில் கொட்டி உற்பத்தியாளர்கள் போராட்டம்
- பால் கொள்முதல் விலையை ரூ.45 ஆக உயர்த்தி வழங்க வேண்டும்.
- போராட்டத்தின்போது தரையில் பாலை கொட்டி கோஷம் எழுப்பினர்.
புதுச்சேரி:
புதுவை பால் உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் ஆம்பூர் சாலை அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்துக்கு பால் உற்பத்தியாளர் சங்க சிறப்பு தலைவர் கீதநாதன், பொதுச்செயலாளர் பெருமாள், தலைவர் ராமகிருஷ்ணன், தொகுதி செயலாளர் ஆறுமுகம் ஆகியோர் தலைமை வகித்தனர். நிர்வாகிகள் வீரப்பன், ஆனந்தன், பாண்டுரங்கன், கணேசன், சுமதி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
பால் கொள்முதல் விலையை ரூ.45 ஆக உயர்த்தி வழங்க வேண்டும். ஊக்கத்தொகை லிட்டருக்கு ரூ.5 வழங்க வேண்டும். இலவச கறவை பசு, கால்நடை தீவனம் வழங்க வேண்டும். முகவர்களுக்கு சரியான நேரத்தில் தட்டுப்பாடின்றி பால் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடந்தது.
போராட்டத்தின்போது தரையில் பாலை கொட்டி கோஷம் எழுப்பினர்.