மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிய உணவை பரிசோதித்த ரங்கசாமி
- புதுவை லாஸ்பேட்டையில் உள்ள மத்திய உணவு கூடத்தில் இருந்து மதிய உணவு தயார் செய்யப்பட்டு அந்தந்த பள்ளிகளுக்கு வழங்கப்படுகிறது.
- மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவு மாதிரியை முதல்-அமைச்சர் ரங்கசாமி ருசித்து பார்த்து ஆய்வு செய்தார்.
புதுவையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு அட்சய பாத்திரம் திட்டத்தின் மூலம் மதிய உணவு வழங்கப்படுகிறது. அரசு, தனியார் தொண்டு நிறுவனம் இணைந்து இந்த திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.
புதுவை லாஸ்பேட்டையில் உள்ள மத்திய உணவு கூடத்தில் இருந்து மதிய உணவு தயார் செய்யப்பட்டு அந்தந்த பள்ளிகளுக்கு வழங்கப்படுகிறது.
அந்த தனியார் நிறுவனம் வழங்கும் மதிய உணவில் பூண்டு, வெங்காயம் போன்றவை சேர்க்கப்படாமல் ருசியின்றி வழங்கப்படுவதாக பொது நலஅமைப்பினர் அதிருப்தி தெரிவித்தனர்.
இந்த நிலையில் மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவு மாதிரியை புதுவை சட்டப்பேரவை அலுவலகத்துக்கு வரவழைத்த முதல்-அமைச்சர் ரங்கசாமி அதன் தரத்தை ருசித்து பார்த்து ஆய்வு செய்தார். மேலும் அதிகாரிகளிடம் ஆலோசனைகளையும் கூறினார்.
மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிய உணவின் மாதிரியை முதல்-அமைச்சர், கல்வி அமைச்சர் அலுவலகங்களுக்கு அனுப்பி வைத்து, அதை சாப்பிட்டு பார்த்து கண்காணிக்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் ரங்கசாமி அறிவுறுத்தியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.