புதுவை - கடலூர் சாலையில் பள்ளி மாணவிகள் முன்பு சைக்கிளில் சாகசம் செய்து கெத்து காட்டிய மாணவன்
- திறமையாக சைக்கிளை ஓட்டி மாணவர் அங்கு நின்றிருந்த மாணவிகள் மட்டுமல்லாது பொது மக்களையும் கவர்ந்தார்.
- சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகம் மாணவர்களுக்கு தகுந்த அறிவுரையை சொல்ல வேண்டும் என பஸ்சுக்கு நின்றிருந்த பலரும் தெரிவித்தனர்.
புதுச்சேரி:
புதுவையில் கடும் வெயில் காரணமாக கோடை விடுமுறை 9 நாட்கள் நீட்டிக்கப்பட்டது.
இந்த விடுமுறைக்கு மாற்றாக சனிக்கிழமைகளில் முழு நாளும் புதுவை மற்றும் காரைக்காலில் பள்ளிகள் இயங்குகின்றன. அந்த வகையில் நேற்று சனிக்கிழமை பள்ளிகள் இயங்கியது.
மாலை பள்ளி முடிந்து வீடு திரும்ப புதுவை- கடலூர் சாலையில் மாணவ-மாணவிகள் பஸ்சுக்கு காத்திருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த அரசு பள்ளி மாணவர் ஒருவர் திடீரென தனது சைக்கிளில் சாகசம் செய்ய தொடங்கினார்.
பஸ்சுக்கு காத்திருந்த மாணவிகளை கவரும் வகையில் கையை விட்டு ஓட்டுவது, முன் சக்கரத்தை தூக்கி ஓட்டுவது, ஹாண்டில் பாரில் சாய்ந்தபடி செல்வது என கெத்து காட்டினார்.
திறமையாக சைக்கிளை ஓட்டி மாணவர் அங்கு நின்றிருந்த மாணவிகள் மட்டுமல்லாது பொது மக்களையும் கவர்ந்தார்.
ஆனாலும், மிகவும் பரபரப்பான புதுவை - கடலூர் சாலையில் சைக்கிள் சாகம் செய்வது ஆபத்தானது. கெத்து காட்டி உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் பெற்றோர் மனம் என்னவாகும்?
எனவே, சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகம் மாணவர்களுக்கு தகுந்த அறிவுரையை சொல்ல வேண்டும் என பஸ்சுக்கு நின்றிருந்த பலரும் தெரிவித்தனர்.
இதனிடையே மாணவனின் சைக்கிள் சாகச வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.