புதுச்சேரி

கோப்பு படம்.

மதுக்கடைகளை குறைத்து இளைஞர்களை நல்வழிபடுத்த வேண்டும்

Published On 2023-05-19 08:40 GMT   |   Update On 2023-05-19 08:40 GMT
  • மக்கள் பாதுகாப்பு பேரியக்கம் கோரிக்கை
  • புதுவைக்கு பெரும் தலைகுனிவு ஏற்பட்டுள்ளது, இதன் மூலம் பெறும் கலாச்சார சீரழிவு புதுவை மாநிலத்தில் ஏற்பட்டுள்ளது.

புதுச்சேரி:

புதுச்சேரி மக்கள் பாதுகாப்பு பேரியக்க தலைவர் கராத்தே வளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்துவதற்கு எந்தவித தடையும் கிடையாது என்று சுப்ரீம் கோர்ட்டு வழங்கிய தீர்ப்பை வரவேற்கி ன்றேன்.

பல்லாயிரம் ஆண்டுகளாக தமிழர்களின் கலா சாரத்தோடு பின்னிப்பி ணைந்த இந்த ஜல்லிக்கட்டு வீர விளையாட்டுக்கு குரல் கொடுத்த அனைவருக்கும் வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். மரக்காணம் செங்கல்பட்டில் விஷ சாராயம் குடித்து 22 பேர் உயிரிழந்துள்ளனர்.

15-க்கும் மேற்பட்டவர்க ளுக்கு பார்வை பறிபோய் உள்ளது. ஏறத்தாழ 60க்கும் மேற்பட்டோர் சிகிச்சையில் உள்ளதாக தகவல் கிடைத்து ள்ளது. இந்த துயரமான செயலுக்கு பொறுப்பேற்று அதற்கான முக்கிய முடிவுகளை எடுக்காமல் தமிழக அரசும், புதுவை அரசும் தட்டி கழித்து வருகின்றனர்.

இந்த குற்றச்செயல் இரு மாநிலம் சம்பந்தப்பட்டு இருப்பதால் உடனடியாக மத்திய அரசு தலையிட்டு சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தர விட வேண்டும். அப்பொழுதுதான் உண்மையான குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு இது போன்ற ஒரு துயரமான நிகழ்வுகள் ஏற்படாமல் நிரந்தரமாக தடுக்க முடியும், புதுவை மாநிலத்தை பொருத்தவரை 10 அடிக்கு ஒரு மதுபான கடை என்ற விகிதத்தில் மாநிலம் முழுவதிலும் உள்ளது. கஞ்சா போன்ற போதை பொருள்களும் தாராளமாக புதுவையில் புழக்கத்தில் உள்ளதாக மக்கள் கூறிக் கொள்கின்றனர்.

தேவையற்ற முறையில் ரெஸ்ட்ரோபார் என்ற மதுக்கடைகளை திறந்ததால் வெளி மாநில சுற்றுலா பயணிகள் பெரும்பாலான வர்கள் குடிப்பதற்கென்று புதுவை மாநிலத்திற்கு வரும் நிலையில் உள்ளதால் புதுவைக்கு பெரும் தலைகுனிவு ஏற்பட்டுள்ளது, இதன் மூலம் பெறும் கலாச்சார சீரழிவு புதுவை மாநிலத்தில் ஏற்பட்டுள்ளது. கலால் வரி ஏய்ப்பும் மாநிலத்தில் நடைபெற்று வருகிறது.

எனவே புதுவை அரசு படிப்படியாக மதுக்கடை களை குறைத்து வருங்கால இளைஞர்களை நல்வழிப்படுத்த முழு முயற்சி எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News