புதுச்சேரி

போலி மதுபானம் தயாரிக்க பயன்படுத்தப்பட்ட பொருட்களை படத்தில் காணலாம்.

போலி மதுபான தொழிற்சாலை நடத்திய முக்கிய பிரமுகரை பிடிக்க தீவிரம்

Published On 2023-10-02 06:43 GMT   |   Update On 2023-10-02 06:43 GMT
  • தமிழக டாஸ்மார்க் மதுபான போலி ஸ்டிக்கர், ஹாலோகிராம் உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்தனர்.
  • போலீ சார் பிடிக்க தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

புதுச்சேரி:

புதுச்சேரி கலால்துறை துணை ஆணையர் மேத்யூ பிரான்சிஸ் உத்தரவின் பேரில் கலால்துறை தாசில்தார் சிலம்பரசன் தலைமையில், போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு புதுவை திருக்காஞ்சி பகுதியில் மினி வேனில் போலி மதுபானம் தயாரித்த 3 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து எரிசாரயம், தமிழக டாஸ்மார்க் மதுபான போலி ஸ்டிக்கர், ஹாலோகிராம் உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்தனர்.

பிடிபட்டவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப் பட்டது. அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் கலால்துறை அதிகாரிகள் சேதராப்பட்டு தொழிற் பேட்டை தீயணைப்பு நிலையம் எதிரே இயங்கி வந்த போலி மதுபான தொழிற்சாலையை கண்டு பிடித்தனர்.

அங்கிருந்த குடோனில் எரிசாராயம், போலி டாஸ்மாக் ஸ்டிக்கர், ஹாலோ கிராம், பாட்டில், சீலிங் எந்திரம் உள்ளிட்ட பொருட் களை பறிமுதல் செய்த அதிகாரிகள், ஆலைக்கு சீல் வைத்தனர்.

முதற்கட்ட விசாரணை யில், இந்த தொழிற்சாலையை தமிழக பகுதியான அனுமந்தையை சேர்ந்த முக்கிய பிரமுகரான ராஜசேகர் நடத்தி வந்தது தெரியவந்தது. இவர் அரியாங்குப்பம் விஜி என்ற விஜயகுமார், மரக்காணம் செவிடன்குப்பத்தை சேர்ந்த சரவணன் ஆகியோர் உதவியுடன் இந்த தொழிற் சாலையை நடத்தி வந்துள்ளார்.

தலைமறைவாக உள்ள 3 பேரையும் கலால்துறை போலீசார் பிடிக்க தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். 

Tags:    

Similar News