புதுவை கலால்துறை அதிகாரி இடமாற்றத்தில் பரபரப்பு தகவல்
- கள்ளச்சாராய கடத்தலை தடுக்காததாக குற்றச்சாட்டு
- இட மாற்றத்துக்கான காரணம் குறித்த தகவல்கள் தற்போது பரபரப்பாக வெளியாகி உள்ளது.
புதுச்சேரி:
தமிழகம் விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கள்ளச்சாராயம் குடித்ததில் 22 பேர் உயிரிழந்துள்ளனர்.
பலர் சிகிச்சையில் உள்ளனர். இந்த நிலையில், உயிரிழப்புக்கு காரணமான கள்ளச்சாராய மூலப்பொ ருள்கள் புதுவையை சேர்ந்த வர்களால் தமிழகத்துக்கு கடத்தி செல்லப்பட்டு விற்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில் புதுவை கலால் துறையின் துணை ஆணையர் டி.சுதாகர் திடீரென இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இவரது இட மாற்றத்துக்கான காரணம் குறித்த தகவல்கள் தற்போது பரபரப்பாக வெளியாகி உள்ளது.
புதுவையில் புதிதாக நடன மது பார்களுக்கு அனுமதி அளிக்கப்படுவதில் முறைகேடுகள் நடப்பதாக முன்னாள் முதல் அமைச்சர் நாராயணசாமி பகிரங்கமாக குற்றஞ்சாட்டி வருகிறார். அதோடு கலால்துறையில் லஞ்சம் பெற்று நகர்புற மதுபார்களை மாநில எல்லை பகுதிக்கு மாற்று வதாகவும் நாராயணசாமி புகார் கூறினார்.
மேலும் புதுவை கலால்துறையின் செய்ல்பாடுகளுக்கு அதிருப்தி தெரிவித்து தமிழக தலைமை செயலாளர் புதுவை தலைமை செயலாளருக்கு கடிதம் அனுப்பியுள்ளதாகவும், இந்த கடிதம் முதல்- அமைச்சர் அலுவலகத்தில் தூங்குவதாகவும் நாராயண சாமி தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் தமிழக கள்ளச்சாராய உயிரிழப்புகளுக்கு கலால்துறையின் கடத்தலை கண்டு கொள்ளாத அலட்சிய போக்கே காரணம் என அரசியல் கட்சிகளும் குற்றஞ்சாட்டின.
கலால்துறை துணை ஆணையரை கண்டித்து உருளையன்பேட்டை தொகுதி சுயேட்சை எம்.எல்.ஏ.நேரு தலைமையில் கலால்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டமும் நேற்று நடந்தது. இதனாலேயே கலால்துறை துணை ஆணையர் டி.சுதாகர் இட மாற்றம் செய்யப்பட்டு ள்ளார் என கூறப்பட்டுகிறது.
அவர் கலால்துறை யிலிருந்து விடுவிக்கப்பட்டு எழுது பொருள் அச்சகப் பிரிவுக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக சமூகநலத்துறை இயக்குனர் குமரனுக்கு கூடுதல் பொறுப்பாக கலால்துறை துணை ஆணையர் பதவி அளிக்கப்பட்டுள்ளது.
தமிழக தலைமை செயலாளரின் கடிதத்தை தொடர்ந்து கவர்னர் தமிழிசை நேரடியாக தலையிட்டு கலால்துறை துணை ஆணையரை இடம் மாற்றம் செய்துள்ளதாக தெரிகிறது.