புதுச்சேரி

பேக்கரி ஊழியரை தாக்கி மாமூல் கேட்ட ரவுடிகளுக்கு 7 ஆண்டு ஜெயில் தண்டனை

Published On 2023-03-09 03:48 GMT   |   Update On 2023-03-09 03:48 GMT
  • மாமூல் தர மறுத்ததால் பொருள்களை சூறையாடினர். அதைத் தடுத்த கடை ஊழியர் சிவராஜைத் தாக்கினர்.
  • ரவுடிகள் மீதான வழக்கு விசாரணை புதுவை தலைமைக் குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்தது.

புதுச்சேரி:

புதுவை காந்தி வீதியில் பேக்கரி வைத்திருப்பவர் சண்முகசுந்தரம். இவரது பேக்கரிக்கு கடந்த 2021-ம் ஆண்டு செப்டம்பரில் புதுவை வைத்திகுப்பத்தைச் சேர்ந்த எலி கார்த்திகேயன் (30), வாணரப்பேட்டையை சேர்ந்த மதி மணிகண்டன் (29) ஆகியோர் மாமூல் கேட்டு தகராறில் ஈடுபட்டனர்.

மாமூல் தர மறுத்ததால் பொருள்களை சூறையாடினர். அதைத் தடுத்த கடை ஊழியர் சிவராஜைத் தாக்கினர். இதில் காயமடைந்த அவர், சிகிச்சைக்குச் சேர்க்கப்பட்டார்.

இதுகுறித்து பெரியகடை போலீசார் வழக்குப் பதிவு செய்து எலி கார்த்தி, மதி ஆகியோரைக் கைது செய்தனர்.

அவர்கள் மீதான வழக்கு விசாரணை புதுவை தலைமைக் குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்தது. விசாரணை முடிவில் குற்றஞ்சாட்டப்பட்ட எலிகார்த்திக், மதி ஆகியோருக்கு தலா 7 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ரூ.16 ஆயிரம் அபராதமும், கட்டத்தவறினால் மேலும் 4 மாதங்கள் சிறை தண்டனையும் விதித்து நீதிபதி மோகன் உத்தரவிட்டார்.

Tags:    

Similar News