புதுச்சேரி

வடமாநில தொழிலாளர்கள் மீது தாக்குதல்- பிடிபட்ட சிறுவனிடம் விசாரணை

Published On 2023-05-17 11:20 GMT   |   Update On 2023-05-17 11:20 GMT
  • வில்லியனூர் இன்ஸ்பெக்டர் வேலையன், சப்- இன்ஸ்பெக்டர் வேலு மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
  • போலீசார் நடத்திய தேடுதல் வேட்டையில் சிறுவன் ஒருவன் பிடிபட்டான்.

புதுச்சேரி:

புதுவை மிஷன் வீதியை சேர்ந்தவர் ஆசிப் நசிர் பட் (39). இவரது சொந்த மாநிலம் காஷ்மீர்.

இவர் கடந்த 15 ஆண்டுகளாக புதுவையில் வசித்து வருகிறார். புதுவை - வில்லியனூர் மெயின் ரோட்டில் கடந்த 9 மாதமாக ஓட்டல் நடத்தி வருகிறார்.

இங்கு மேற்குவங்கத்தை சேர்ந்த ஷேக் ரகிமுதின் (21), அப்துல் ரசாக்கான் (19) ரூப் கான் (21) உத்தரபிரதேசத்தை சேர்ந்த ரோஷன் அலி (19) போலநாத் (26) ஆகியோர் வேலை செய்து வருகின்றனர்.

இவர்கள், நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்து வில்லியனூர் பெரம்பை மெயின் ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தனர்.

அப்போது உள்ளூரை சேர்ந்த சிலர் அவர்களை வழிமறித்து சரமாரி தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

இதில் அவர்கள் ஷேக் ரகி முதினை பீர் பாட்டிலால் தலையில் அடித்துள்ளனர்.

இதுகுறித்து ஆசீப் நசிர் பட் வில்லியனூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதுகுறித்து வில்லியனூர் இன்ஸ்பெக்டர் வேலையன், சப்- இன்ஸ்பெக்டர் வேலு மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விசாரணையில் வடமாநில தொழிலாளர்களை தாக்கியவர்கள் அதே பகுதியை சேர்ந்த சிறுவர்கள் என்பதும், ஏற்கனவே மளிகை கடையை உடைத்து திருட முயன்ற வழக்கு, கொலைக்கு உதவி செய்வது உள்ளிட்டவற்றில் தொடர்புடையவர்கள் என்பதும் தெரியவந்தது.

இதனையடுத்து போலீசார் நடத்திய தேடுதல் வேட்டையில் சிறுவன் ஒருவன் பிடிபட்டான்.

அவனிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News