புதுச்சேரி
புதுவையில் உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்படுமா?- மாநில தேர்தல் ஆணையர் டெல்லியில் முகாம்
- புதுவையில் உள்ளாட்சி தேர்தலை நடத்தி முடித்திட சுப்ரீம்கோர்ட்டு விதித்த காலக்கெடு முடிவடைந்துள்ளது.
- இதனால் கோர்ட்டு அவமதிப்பை தவிர்த்திட மாநில தேர்தல் ஆணையர் தாமஸ் கடந்த ஒரு வாரமாக டெல்லியில் முகாமிட்டுள்ளார்.
புதுச்சேரி:
புதுவையில் 2011-க்கு பிறகு 10 ஆண்டுக்கும் மேலாக உள்ளாட்சி தேர்தல் நடைபெறவில்லை.
சுப்ரீம்கோர்ட்டு தலையீட்டுக்கு பிறகு உள்ளாட்சி தேர்தல் பணிகள் தொடங்கியது.
இருப்பினும் இடஒதுக்கீடு தொடர்பாக அரசியல் கட்சிகள் தொடர்ந்த வழக்கால் 2 முறை தேதி அறிவிக்கப்பட்டும், தேர்தல் நடைபெறாமல் தள்ளி வைக்கப்பட்டது. இந்நிலையில் உள்ளாட்சி தேர்தலை நடத்தி முடித்திட சுப்ரீம்கோர்ட்டு விதித்த காலக்கெடு முடிவடைந்துள்ளது.
இதனால் கோர்ட்டு அவமதிப்பை தவிர்த்திட மாநில தேர்தல் ஆணையர் தாமஸ் கடந்த ஒரு வாரமாக டெல்லியில் முகாமிட்டுள்ளார். அடுத்தகட்ட நடவடிக்கை தொடர்பாக சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்தி, சுப்ரீம்கோர்ட்டு ஆலோசனையை பெற நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார்.
இதனால் புதுவையில் உள்ளாட்சி தேர்தலுக்கான அறிவிப்பு எப்போது வேண்டுமானாலும் வெளியாகும் என தெரிகிறது.