15.வேலம்பாளையம் அரசு பள்ளியில் ஸ்மார்ட் வகுப்பறைகள் திறப்பு விழா - எம்.எல்.ஏ.,மேயர் பங்கேற்பு
- ரூ.80 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக 8 புதிய ஸ்மார்ட் வகுப்புகள் கட்டி கொடுத்துள்ளனர்.
- ஆசிரியர்கள், பள்ளி மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
திருப்பூர் :
திருப்பூர் மாநகராட்சி 15.வேலம்பாளையம் நடுநிலை ப்பள்ளியில் வேலம்பாளையம் அறிவுத்திருக்கோவில் மற்றும் அட்சயா அறக்கட்டளை சார்பில் ரூ.80 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக 8 புதிய ஸ்மார்ட் வகுப்புகள் கட்டி கொடுத்துள்ளனர்.இதன் திறப்பு விழா இன்று நடந்தது.
விழாவில் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் க.செல்வராஜ் எம்.எல்.ஏ., கலந்துகொண்டு புதிய ஸ்மார்ட் வகுப்புகளை திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சுப்பராயன், மேயர் தினேஷ்குமார், மாநகராட்சி ஆணையர் பவன்குமார் கிரியப்பனவர், துணை மேயர் பாலசுப்பிரமணியம், மண்டலத் தலைவர் உமாமகேஸ்வரி வெங்கடாசலம், ஏற்றுமதியாளர் சங்கத் தலைவர் சுப்பிரமணியம், கவுன்சிலர்கள் ராதாகிருஷ்ணன், பத்மாவதி, செல்வராஜ், அனுசுயாதேவி, சண்முகசுந்தரம், பிரேமலதா , கோட்டா பாலு, அறக்கட்டளை நிர்வாகிகள், ஆசிரியர்கள், பள்ளி மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.