ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 பிராசஸர், 6000 எம்ஏஹெச் பேட்டரியுடன் அறிமுகமான ROG போன் 7
- அசுஸ் நிறுவனத்தின் புதிய ROG போன் 7 அதிகபட்சம் 16 ஜிபி ரேம் கொண்டிருக்கிறது.
- அசுஸ் ROG போன் 7 மேம்பட்ட கேம்கூல் 7-இல் உள்ள தெர்மல் சிஸ்டம் சிறப்பான கூலிங்கை உறுதிப்படுத்துகிறது.
அசுஸ் நிறுவனம் இந்திய சந்தையில் தனது அதிநவீன ROG போன் 7 மாடலை அறிமுகம் செய்தது. புதிய ROG போன் 7 மாடலில் 6.78 இன்ச் Full HD+ AMOLED HDR டிஸ்ப்ளே, 165Hz ரிப்ரெஷ் ரேட், ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 பிராசஸர், அதிகபட்சம் 16 ஜிபி ரேம் வழங்கப்பட்டு உள்ளது. இதில் உள்ள மேம்பட்ட கேம்கூல் 7 தெர்மல் சிஸ்டம் சிறப்பான கூலிங் வழங்குவதை உறுதிப்படுத்துகிறது.
இந்த ஸ்மார்ட்போனில் IP54 தர வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட் வசதி, இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார், 50MP பிரைமரி கேமரா, 13MP அல்ட்ரா வைடு கேமரா, 5MP மேக்ரோ கேமரா, 32MP செல்ஃபி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. புதிய ROG போன் 7 மாடலில் உள்ள ROG லோகோவில் ஆர்ஜிபி மின்விளக்குகள் உள்ளன.
இத்துடன் 3.5mm ஆடியோ ஜாக், சிமெட்ரிக்கல் டூயல் முன்புற ஸ்பீக்கர்கள், டிராக் HD சவுண்ட், டூயல் செல் 6000 எம்ஏஹெச் பேட்டரி, 65 வாட் ஹைப்பர்சார்ஜ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.
அசுஸ் ROG போன் 7 அம்சங்கள்:
6.78 இன்ச் 2448x1080 பிக்சல் Full HD+ 165Hz OLED 10-பிட் HDR டிஸ்ப்ளே
கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் பாதுகாப்பு
ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 பிராசஸர்
அட்ரினோ நெக்ஸ்ட் ஜென் GPU
12 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி
16 ஜிபி ரேம், 512 ஜிபி மெமரி
ஆண்ட்ராய்டு 13 மற்றும் ROG யுஐ மற்றும் ஜென் யுஐ
டூயல் சிம் ஸ்லாட்
50MP பிரைமரி கேமரா
13MP அல்ட்ரா வைடு கேமரா
5MP மேக்ரோ கேமரா
32MP செல்ஃபி கேமரா
3.5mm ஆடியோ ஜாக், டூயல் ஸ்பீக்கர்கள்
இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.3
யுஎஸ்பி டைப் சி
டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டண்ட்
6000 எம்ஏஹெச் பேட்டரி
65 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்
குயிக் சார்ஜ் 5.0 மற்றும் பிடி 3.0 சார்ஜிங்
விலை மற்றும் விற்பனை விவரங்கள்:
அசுஸ் ROG போன் 7 மாடல் ஸ்டார்ம் வைட் மற்றும் ஃபேண்டம் பிளாக் நிறங்களில் கிடைக்கிறது. இதன் 12 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 74 ஆயிரத்து 999 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. ROG போன் 7 அல்டிமேட் ஸ்டார்ம் வைட் (16 ஜிபி ரேம், 512 ஜிபி மெமரி) மாடலின் விலை ரூ. 99 ஆயிரத்து 999 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
இந்தியாவில் இந்த ஸ்மார்ட்போனிற்கான டெமோ விஜய் சேல்ஸ்-இல் நடைபெற இருக்கிறது. எனினும், விற்பனை எப்போது துவங்கும் என்பது பற்றி இதுவரை எந்த தகவலும் வழங்கப்படவில்லை.