நோக்கியா லூமியா ஸ்டைலில் உருவாகும் புது ஸ்மார்ட்போன் - வெளியீடு எப்போ தெரியுமா?
- அதிகபட்சம் 12 ஜி.பி. வரையிலான ரேம் வழங்கப்படுகிறது.
- புகைப்படங்களை எடுக்க 108MP பிரைமரி கேமரா சென்சார் வழங்கப்படுகிறது.
ஹெச்.எம்.டி. நிறுவனம் உருவாக்கி வரும் புதிய ஸ்மார்ட்போன் பற்றிய விவரங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது. புதிய ஹெச்.எம்.டி. ஸ்மார்ட்போன் ஃபேபுலா போன்ற டிசைன் கொண்டிருக்கிறது.
இவை தோற்றத்தில் நோக்கியாவின் லூமியா சீரிஸ் போன்றே காட்சியளிக்கிறது. புதிய ஹெச்.எம்.டி. ஸ்மார்ட்போன்களின் புகைப்படத்துடன் இதன் வெளியீடு பற்றிய தகவல்களும் லீக் ஆகியுள்ளது. அதன்படி லூமியா ஸ்டைலிங் கொண்ட முற்றிலும் புதிய ஹெச்.எம்.டி. ஸ்மார்ட்போன் ஜூலை மாத வாக்கில் அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது.
இந்த ஸ்மார்ட்போன் ஹெச்.எம்.டி. டாம்கேட் என்ற பெயரில் விற்பனைக்கு வர இருக்கிறது. அம்சங்களை பொருத்தவரை இந்த மாடலில் குவால்காம் நிறுவனத்தின் ஸ்னாப்டிராகன் 7s ஜென் 2 பிராசஸர், அதிகபட்சம் 12 ஜி.பி. வரையிலான ரேம் வழங்கப்படுகிறது.
இத்துடன் புகைப்படங்களை எடுக்க 108MP பிரைமரி கேமரா சென்சார், அல்ட்ரா வைடு லென்ஸ், டெப்த் சென்சார் மற்றும் 32MP செல்ஃபி கேமரா வழங்கப்படுகிறது. மெமரியை பொருத்தவரை இந்த மாடலில் அதிகபட்சம் 256 ஜி.பி. ஸ்டோரேஜ் வழங்கப்படலாம். ஹெச்.எம்.டி. டாம்கேட் மாடலில் Full HD+ AMOLED டிஸ்ப்ளே, 120Hz ரிப்ரெஷ் ரேட் மற்றும் ஆண்ட்ராய்டு 14 ஓ.எஸ். வழங்கப்படுகிறது.
4900 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 33 வாட் சார்ஜிங் வசதி கொண்டிருக்கும் ஹெச்.எம்.டி. டாம்கேட் மாடலில் ப்ளூடூத் 5.2, 3.5mm ஆடியோ ஜாக், என்.எஃப்.சி. கனெக்டிவிட்டி, டூயல் ஸ்பீக்கர்கள், பியூர்வியூ மற்றும் OZO ஆடியோ சப்போர்ட் உள்ளிட்ட வசதிகள் வழங்கப்படும் என்று தெரிகிறது. இத்துடன் IP67 தரச் சான்று பெற்றிருக்கும் என்றும் கூறப்படுகிறது.