மொபைல்ஸ்

பட்ஜெட் விலையில் புதிய G சீரிஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யும் மோட்டோ

Published On 2024-01-24 09:54 GMT   |   Update On 2024-01-24 09:54 GMT
  • புதிய மோட்டோ ஸ்மார்ட்போன் 6000 எம்.ஏ.ஹெச். பேட்டரி கொண்டிருக்கிறது.
  • இதன் பக்கவாட்டில் கைரேகை சென்சார் வழங்கப்படுகிறது.

மோட்டோரோலா நிறுவனத்தின் மோட்டோ G24 பவர் ஸ்மார்ட்போன் ஜனவரி 30-ம் தேதி இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இது மோட்டோ நிறுவனத்தின் பட்ஜெட் ரக ஸ்மார்ட்போன் ஆகும்.

புதிய மோட்டோ G24 பவர் மாடலில் 6000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 30 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படுகிறது. சமீபத்தில் மோட்டோ G24 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், அந்த மாடல் 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி மற்றும் 15 வாட் சார்ஜிங் வசதி கொண்டிருந்தது. மோட்டோ G24 பவர் மாடலில் 16MP செல்ஃபி கேமரா வழங்கப்படுகிறது.

 


இவை தவிர மற்ற அம்சங்கள் பெரும்பாலும் G24 மாடலில் உள்ளதை போன்றே வழங்கப்படும் என தெரிகிறது. அந்த வகையில், மோட்டோ G24 பவர் மாடலில் 6.56 இன்ச் 90Hz HD+ ஸ்கிரீன், ஹீலியோ G85 பிராசஸர், அதிகபட்சம் 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி, 50MP பிரைமரி கேமரா, 2MP மேக்ரோ கேமரா, ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், டால்பி அட்மோஸ், பக்கவாட்டில் கைரேகை சென்சார் வழங்கப்படுகிறது.

இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 14 ஒ.எஸ்., IP52 தர வாட்டர் ரெசிஸ்டன்ட் வசதி கொண்டிருக்கும் என தெரிகிறது. புதிய மோட்டோ G24 பவர் கிளேசியர் புளூ மற்றும் இன்க் புளூ என இரண்டு நிறங்களில் கிடைக்கும் என தெரியவந்துள்ளது. இதன் விலை ரூ. 10 ஆயிரத்திற்கும் குறைவாகவே நிர்ணயம் செய்யப்படும் என தெரிகிறது.

புதிய மோட்டோ G24 பவர் ஸ்மார்ட்போன் ப்ளிப்கார்ட், மோட்டோரோலா வலைதளங்கள் மற்றும் ரீடெயில் ஸ்டோர்களில் விற்பனை செய்யப்பட இருக்கிறது. இதன் விலை மற்றும் இதர விவரங்கள் அடுத்த வாரம் முழுமையாக தெரியவரும்.



Tags:    

Similar News