null
ரூ. 999 விலையில் UPI ஆப்ஷன் கொண்ட நோக்கியா போன் அறிமுகம்
- புதிய நோக்கியா 105 கிளாசிக் மாடல் இரண்டு நிறங்களில் கிடைக்கிறது.
- இந்த மொபைலுடன் ஒரு வருடத்திற்கான வாரண்டி வழங்கப்படுகிறது.
ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் இந்திய சந்தையில் புதிய ஃபீச்சர் போன் மாடலை அறிமுகம் செய்தது. நோக்கியா 105 கிளாசிக் என்று அழைக்கப்படும் புதிய ஃபீச்சர் போன் மாடலில் இன்-பில்ட் யு.பி.ஐ. செயலி உள்ளது. இத்துடன் 800 எம்.ஏ.ஹெச். பேட்டரி, வயர்லெஸ் எப்.எம். ரேடியோ மற்றும் பல்வேறு அம்சங்கள் உள்ளன.
இந்த மொபைலில் உள்ள பட்டன்கள் ஒவ்வொன்றுக்கும் இடையில் அதிக இடைவெளி இருக்கிறது. இவற்றை கொண்டு இருள் சூழ்ந்த பகுதிகளிலும் மொபைலை எவ்வித சிரமமும் இன்றி பயன்படுத்த முடியும். இது எர்கோனமிக் டிசைன் மற்றும் கச்சிதமான வடிவம் கொண்டிருக்கிறது.
புதிய நோக்கியா 105 கிளாசிக் மாடல் சார்கோல் மற்றும் புளூ என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது. இந்த மொபைல் போன் சிங்கில் சிம், டூயல் சிம் மற்றும் சார்ஜர் உடன் ஒரு வேரியண்ட் மற்றும் சார்ஜர் இன்றி மற்றொரு வேரியண்ட் என மொத்தம் நான்கு வேரியண்ட்களில் கிடைக்கிறது. இதன் துவக்க விலை ரூ. 999 ஆகும்.
இந்த மொபைல் போன் நோக்கியா வலைதளம், ஆஃப்லைன் ஸ்டோர் மற்றும் இதர சில்லறை விற்பனை மையங்களில் நடைபெறுகிறது. இந்த மொபைலுடன் ஒரு வருடத்திற்கான வாரண்டியும் வழங்கப்படுகிறது.