யுபிஐ வசதி கொண்ட நோக்கியா மொபைல்கள் இந்தியாவில் அறிமுகம்
- நோக்கியா பிரான்டிங்கில் இரண்டு புதிய மொபைல் போன்கள் அறிமுகம்.
- நோக்கியா ஃபீச்சர் போன்களில் யுபிஐ வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.
ஹெச்எம்டி குளோபல் நிறுவனம் இந்திய சந்தையில் இரண்டு புதிய நோக்கியா மொபைல் போன்களை அறிமுகம் செய்து இருக்கிறது. நோக்கியா 110 4ஜி மற்றும் நோக்கியா 110 2ஜி மாடல்கள் 2021-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட மாடல்களின் மேம்பட்ட வெர்ஷன் ஆகும். இரு மாடல்களும் மெல்லிய மற்றும் பிரீமியம் டிசைன் கொண்டிருக்கின்றன.
இத்துடன் நானோ-டெக்ஸ்ச்சர் பாடி மற்றும் பில்ட்-இன் யுபிஐ சப்போர்ட் வழங்கப்பட்டு உள்ளது. நோக்கியாவின் பாரம்பரியம் மிக்க உற்பத்தி தரம் மற்றும் வித்தியாசமான ஸ்டைல் உள்ளிட்டவை புதிய மாடல்களிலும் தொடர்கிறது. புதிய நோக்கியா மாடல்களில் பில்ட்-இன் கேமரா, எஸ்டி கார்டு ஸ்லாட், மியூசிக் பிளேயர் மற்றும் ஆட்டோ கால் ரெக்கார்டர் வழங்கப்பட்டு இருக்கிறது.
நோக்கியா 110 4ஜி (2023) அம்சங்கள்:
1.8 இன்ச் QQVGA ரெசல்யூஷன் டிஸ்ப்ளே
QCGA பிரைமரி கேமரா
1450 எம்ஏஹெச் பேட்டரி
ப்ளூடூத் 5.0
3.5mm ஹெட்போன் ஜாக்
மைக்ரோ யுஎஸ்பி 2.0
மைக்ரோ எஸ்டி கார்டு சப்போர்ட்
எஸ் 30 பிளஸ் ஒஎஸ்
வயர்டு + வயர்லெஸ் எப்எம் ரேடியோ
2ஜி, 3ஜி, 4ஜி (நானோ சிம், டூயல் சிம் சப்போர்ட்)
IP52 தர வாட்டர் ரெசிஸ்டன்ட்
நோக்கியா 110 2ஜி (2023) அம்சங்கள்:
1.8 இன்ச் QQVGA ரெசல்யூஷன் டிஸ்ப்ளே
QCGA பிரைமரி கேமரா
1000 எம்ஏஹெச் பேட்டரி
யுஎஸ்பி கனெக்ஷன், மைக்ரோ யுஎஸ்பி
மைக்ரோ எஸ்டி சப்போர்ட்
எஸ் 30 பிளஸ் ஒஎஸ்
வயர்டு + வயர்லெஸ் எப்எம் ரேடியோ
2ஜி, டூயல் சிம்
IP52 தர வாட்டர் ரெசிஸ்டன்ட்
விலை மற்றும் விற்பனை விவரங்கள்:
நோக்கியா 110 4ஜி (2023) மாடல் மிட்நைட் புளூ மற்றும் ஆர்க்டிக் பர்பில் என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 2 ஆயிரத்து 499 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. நோக்கியா 110 2ஜி (2023) மாடல் சார்கோல் மற்றும் கிளவுடி புளூ நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 1,699 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இரு மாடல்களின் விற்பனை விரைவில் ஆஃப்லைன் ஸ்டோர்களில் துவங்க இருக்கிறது.