4ஜி கனெக்டிவிட்டி, டூயல் மோட் FM வசதியுடன் நோக்கியா Feature போன் அறிமுகம்
- கழற்றக்கூடிய பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது.
- கிளவுட் சார்ந்த செயலிகளை பயன்படுத்தும் வசதி உள்ளது.
ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் நோக்கியா 215, 225 மற்றும் 235 4ஜி பீச்சர் போன் மாடல்களை அறிமுகம் செய்தது. புதிய பீச்சர் போன் மாடல்கள் பல்வேறு நிறங்களில் கிடைக்கிறது. இவற்றில் T9 கீபோர்டு, ப்ளூடூத், எஃப்.எம். ரேடியோ, QVGA ஸ்கிரீன் மற்றும் கழற்றக்கூடிய பேட்டரி உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கிறது.
ஆப்பிரிக்கா, இந்தியா, மத்திய கிழக்கு மற்றும் தேர்வு செய்யப்பட்ட ஆசிய பசிபிக் நாடுகளில் இந்த பீச்சர் போன் மாடல்கள் கிளவுட் சார்ந்த செயலிகளை பயன்படுத்தும் வசதி கொண்டிருக்கும். இவற்றை கொண்டு ஸ்மார்ட் அம்சங்களான செய்திகள், வானிலை மற்றும் யூடியூப் ஷார்ட்ஸ் உள்ளிட்டவைகளை ஒரே தளத்தில் இயக்க முடியும்.
அம்சங்களை பொருத்தவரை நோக்கியா 215 4ஜி மற்றும் நோக்கியா 235 4ஜி பீச்சர் போன்களில் 2.8 இன்ச் டிஸ்ப்ளே, QVGA ரெசல்யூஷன், நோக்கியா 225 4ஜி மாடலில் 2.4 இன்ச் டிஸ்ப்ளே, QVGA ரெசல்யூஷன் கொண்டிருக்கிறது. இத்துடன் மூன்று மாடல்களிலும் யுனிசாக் T107 பிராசஸர், எஸ்30 பிளஸ் பிராசஸர் கொண்டிருக்கிறது.
நோக்கியா 225 4ஜி மற்றும் 235 4ஜி மாடல்களில் முறையே வி.ஜி.ஏ. கேமரா மற்றும் 2MP கேமரா கொண்டிருக்கிறது. நோக்கியா 215 4ஜி மாடலின் பின்புறம் டார்ச், 225 4ஜி மற்றும் 235 4ஜி மாடல்களில் எல்.இ.டி. ஃபிளாஷ் வழங்கப்பட்டு இருக்கிறது.
மூன்று புதிய பீச்சர் போன்களிலும் MP3 பிளேயர், எஃப்.எம். ரேடியோ, ப்ளூடூத் 5, 3.5mm ஹெட்போன் ஜாக், யு.எஸ்.பி. டைப் சி, 64MB ரேம், 128MB மெமரி, மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி, 1450 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது.
நோக்கியா 215 4ஜி மாடல் பீச், பிளாக் மற்றும் டார்க் புளூ நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை 59 யூரோக்கள், இந்திய மதிப்பில் ரூ. 5 ஆயிரத்து 280 என துவங்குகிறது. நோக்கியா 225 4ஜி மாடல் பின்க் மற்றும் டார்க் புளூ நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை 69 யூரோக்கள், இந்திய மதிப்பில் ரூ. 6 ஆயிரத்து 170 ஆகும்.
நோக்கியா 235 4ஜி மாடல் புளூ, பிளாக் மற்றும் பர்பில் நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை 79 யூரோக்கள், இந்திய மதிப்பில் ரூ. 7 ஆயிரத்து 070 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.