ரூ. 7,999 விலையில் புதிய நோக்கியா ஸ்மார்ட்போன் அறிமுகம்!
- மிகக் குறைந்த விலையில் புதிய நோக்கியா ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது.
- நோக்கியா C12 பிளஸ் ஸ்மார்ட்போன் யுனிசாக் பிராசஸர், 2 ஜிபி ரேம், 4000 எம்ஏஹெச் பேட்டரி கொண்டிருக்கிறது.
நோக்கியா C12 பிளஸ் எண்ட்ரி லெவல் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. புதிய ஸ்மார்ட்போன் விவரங்கள் நோக்கியா இந்தியா அதிகாரப்பூர்வ வலைதளத்தில் இடம்பெற்றுள்ளன. இந்த ஸ்மார்ட்போன் ஏற்கனவே அறிமுகம் செய்யப்பட்ட நோக்கியா C12 ப்ரோ ஸ்மார்ட்போனுடன் இணைகிறது.
புதிய நோக்கியா C12 பிளஸ் மாடலில் 6.3 இன்ச் HD+ ஸ்கிரீன், யுனிசாக் ஆக்டா கோர் பிராசஸர், 8MP பிரைமரி கேமரா, ஆண்ட்ராய்டு 12 கோ எடிஷன் ஒஎஸ் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் 2 ஜிபி ரேம், 32 ஜிபி மெமரி, மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி, 5MP செல்ஃபி கேமரா, 4000 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது.
நோக்கியா C12 பிளஸ் அம்சங்கள்:
6.3 இன்ச் HD+ ஸ்கிரீன்
யுனிசாக் ஆக்டா கோர் பிராசஸர்
2 ஜிபி ரேம்
32 ஜிபி மெமரி
மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
8MP பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ்
5MP செல்ஃபி கேமரா
4000 எம்ஏஹெச் பேட்டரி
வைபை, ப்ளூடூத் 5.2
மைக்ரோ யுஎஸ்பி
3.5mm ஹெட்போன் ஜாக்
ஆண்ட்ராய்டு 12 கோ எடிஷன் ஒஎஸ்
விலை விவரங்கள்:
இந்திய சந்தையில் சார்கோல், டார்க் சியான் மற்றும் லைட் மிண்ட் என மூன்று வித நிறங்களில் கிடைக்கும் நோக்கியா C12 பிளஸ் ஸ்மார்ட்போனின் விலை ரூ. 7 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் விற்பனை பற்றி இதுவரை எவ்வித தகவல்களும் வழங்கப்படவில்லை.