5050 எம்ஏஹெச் பேட்டரியுடன் புது நோக்கியா ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்!
- ஹெச்எம்டி குளோபல் நிறுவனம் இந்திய சந்தையில் புது நோக்கியா ஸ்மார்ட்போனினை பட்ஜெட் பிரிவில் அறிமுகம் செய்தது.
- புதிய நோக்கியா ஸ்மார்ட்போனின் பின்புறம் கைரேகை சென்சார், 5050 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது.
ஹெச்எம்டி குளோபல் நிறுவனம் நோக்கியா C31 ஸ்மார்ட்போனினை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. முன்னதாக இந்த ஸ்மார்ட்போன் செப்டம்பர் மாத வாக்கில் அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. புதிய நோக்கியா C31 ஸ்மார்ட்போனில் 6.7 இன்ச் HD+ நாட்ச் ஸ்கிரீன், ஆக்டா கோர் பிராசஸர், அதிகபட்சம் 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி, ஆண்ட்ராய்டு 12 ஒஎஸ் வழங்கப்பட்டு இருக்கிறது.
இத்துடன் இரண்டு ஆண்டுகளுக்கு காலாண்டு செக்யூரிட்டி அப்டேட்கள் வழங்கப்பட இருக்கிறது. பிரபல செயலிகள் பிரீ-இன்ஸ்டால் செய்யப்பட்டு கிடைக்கும் நோக்கியா C31 ஸ்மார்ட்போனில் புகைப்படங்களை எடுக்க 13MP பிரைமரி கேமரா, 2MP டெப்த், 2MP மேக்ரோ கேமரா, 5MP செல்ஃபி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. நார்டிக் டிசைன் கொண்டிருக்கும் நோக்கியா C31 ஸ்மார்ட்போன் பின்புறம் கைரேகை சென்சார் மற்றும் 5050 எம்ஏஹெச் பேட்டரி கொண்டிருக்கிறது.
நோக்கியா C31 அம்சங்கள்:
6.7 இன்ச் 1600x720 பிக்சல் HD+ V நாட்ச் எல்சிடி ஸ்கிரீன்
1.6 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் யுனிசாக் SC9863A1 பிராசஸர்
IMG8322 GPU
3 ஜிபி ரேம், 32 ஜிபி மெமரி
4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி
மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
டூயல் சிம் ஸ்லாட்
ஆண்ட்ராய்டு 12
13MP பிரைமரி கேமரா
2MP டெப்த் கேமரா
2MP மேக்ரோ கேமரா
5MP செல்ஃபி கேமரா
பின்புறம் கைரேகை சென்சார்
3.5mm ஆடியோ ஜாக், எஃப்எம் ரேடியோ
டஸ்ட் மற்றும் ஸ்பிலாஷ் ரெசிஸ்டண்ட்
டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 4.2
மைக்ரோ யுஎஸ்பி
5050 எம்ஏஹெச் பேட்டரி
10 வாட் சார்ஜிங்
விலை மற்றும் விற்பனை விவரங்கள்:
புதிய நோக்கியா C31 ஸ்மார்ட்போன் சார்கோல், மிண்ட் மற்றும் சியான் நிறங்களில் கிடைக்கிறது. இதன் 3 ஜிபி ரேம், 32 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 9 ஆயிரத்து 999 என்றும் 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 10 ஆயிரத்து 999 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. விற்பனை நோக்கியா மற்றும் சில்லறை விற்பனை மையங்களில் ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது. மற்ற ஆன்லைன் வலைதளங்களில் விரைவில் விற்பனைக்கு வருகிறது.