மொபைல்ஸ்
null

இணையத்தில் லீக் ஆன புதிய நோக்கியா ஸ்மார்ட்போன்

Published On 2023-02-11 08:11 GMT   |   Update On 2023-02-11 08:11 GMT
  • நோக்கியா நிறுவனத்தின் புதிய G22 ஸ்மார்ட்போன் ஆக்டா கோர் யுனிசாக் பிராசஸர் கொண்டிருக்கிறது.
  • இத்துடன் ஆண்ட்ராய்டு 12 மற்றும் ஸ்டாக் ஆண்ட்ராய்டு யுஐ, IPS LCD ஸ்கிரீன், 90Hz ரிப்ரெஷ் ரேட் கொண்டுள்ளது.

நோக்கியா நிறுவனம் விரைவில் புதிய G சீரிஸ் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்ய இருக்கிறது. புதிய நோக்கியா G22 ஸ்மார்ட்போன் கீக்பென்ச் வலைதளத்தில் லீக் ஆகி இருக்கிறது. லிஸ்டிங்கின் படி புதிய நோக்கியா ஸ்மார்ட்போன் யுனிசாக் பிராசஸர், 4 ஜிபி ரேம் வழங்கப்பட்டு இருக்கிறது. புதிய நோக்கியா G22 ஏற்கனவே அறிமுகமான நோக்கியா G21 ஸ்மார்ட்போனின் மேம்பட்ட வெர்ஷன் ஆகும்.

கீக்பென்ச் டெஸ்டிங்கில் நோக்கியா G22 ஸ்மாரட்போன் சிங்கில் கோரில் 308 புள்ளிகளையும், மல்டி-கோர் டெஸ்டில் 1094 புள்ளிகளையும் பெற்று இருக்கிறது. இதில் உள்ள அம்சங்களை பொருத்தவரை இது சிறப்பான குறைந்த விலை ஸ்மார்ட்போனாக இருக்கும் என தெரிகிறது.

நோக்கியா G22 அம்சங்கள்:

மைஸ்மார்ட்பிரைஸ் வெளியிட்டு இருக்கும் தகவல்களின் படி நோக்கியா G22 ஸ்மார்ட்போன் 1.8 ஜிகாஹெர்ட்ஸ் யுனிசாக் டி606 பிராசஸர், மாலி G57 GPU, 4 ஜிபி ரேம், ஆண்ட்ராய்டு 12 மற்றும் ஸ்டாக் ஆண்ட்ராய்டு யுஐ வழங்கப்படும் என தெரிகிறது.

ஏற்கனவே அறிமுகம் செய்யப்பட்ட நோக்கியா G21 மாடலில் 6.5 இன்ச் IPS LCD ஸ்கிரீன், வாட்டர் டிராப் நாட்ச், 90Hz ரிப்ரெஷ் ரேட், 50MP பிரைமரி கேமரா, 2MP மேக்ரோ கேமரா, 2MP டெப்த் கேமரா, 8MP செல்ஃபி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனிலும் யுனிசாக் T606 பிராசஸர், 5050 எம்ஏஹெச் பேட்டரி, 18 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது. 

Tags:    

Similar News