மிட்-ரேன்ஜ் பிரிவில் புது நோக்கியா 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்
- ஹெச்எம்டி குளோபல் நிறுவனம் இந்திய சந்தையில் புது நோக்கியா ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்து இருக்கிறது.
- புது ஸ்மார்ட்போன் நோக்கியா பிராண்டிங்கில் சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது.
ஹெச்எம்டி குளோபல் நிறுவனம் இந்தியாவில் நோக்கியா G60 5ஜி ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது. முன்னதாக செப்டம்பர் மாத வாக்கில் இந்த ஸ்மார்ட்போன் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. புதிய நோக்கியா G60 5ஜி ஸ்மார்ட்போன் 100 சதவீதம் மறுசுழற்சி செய்யப்பட்ட பாலிகார்போனேட் பேக், 60 சதவீதம் மறுசுழற்சி செய்யப்பட்ட பாலிகார்போனேட் பிரேம் கொண்டிருக்கிறது.
புதிய நோக்கியா ஸ்மார்ட்போனிற்கு மூன்று ஆண்டுகள் ஒஎஸ் அப்டேட், மாதாந்திர செக்யூரிட்டி அப்டேட் மற்றும் இரண்டு ஆண்டுகளுக்கு வாரண்டி வழங்கப்படுகிறது. இதன் மூலம் வாடிக்கையாளர்கள் நோக்கியா ஸ்மார்ட்போனினை நீண்ட காலத்திற்கு பயன்படுத்த முடியும். இந்த ஸ்மார்ட்போனுடன் வரும் பெட்டியும் அதிகளவு மறுசுழற்சி செய்யப்பட்ட பொருட்களை கொண்டே உருவாக்கப்பட்டு இருக்கிறது.
அம்சங்களை பொருத்தவரை நோக்கியா G60 5ஜி ஸ்மார்ட்போனில் 6.58 இன்ச் 1080x2400 பிக்சல் வி நாட்ச், FHD+ LCD ஸ்கிரீன், 120Hz ரிப்ரெஷ் ரேட், கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு, ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 695 பிராசஸர், அட்ரினோ 619L GPU, அதிகபட்சம் 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் டூயல் சிம் ஸ்லாட், ஆண்ட்ராய்டு 12 ஒஎஸ் உள்ளது.
நோக்கியா G60 5ஜி சிறப்பம்சங்கள்:
6.58 இன்ச் 1080x2400 பிக்சல் வி நாட்ச், FHD+ LCD ஸ்கிரீன், 120Hz ரிப்ரெஷ் ரேட்
கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு
ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 695 பிராசஸர்
அட்ரினோ 619L GPU
அதிகபட்சம் 6 ஜிபி ரேம்
128 ஜிபி மெமரி
மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
டூயல் சிம் ஸ்லாட்
ஆண்ட்ராய்டு 12
50MP பிரைமரி கேமரா, எல்இடி பிளாஷ்
5MP அல்ட்ரா வைடு கேமரா
2MP டெப்த் சென்சார்
8MP செல்பி கேமரா
பக்கவாட்டில் கைரேகை சென்சார்
3.5mm ஆடியோ ஜாக்
5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.1
யுஎஸ்பி டைப் சி
4500 எம்ஏஹெச் பேட்டரி
20 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி
விலை மற்றும் விற்பனை விவரங்கள்:
புதிய நோக்கியா G60 5ஜி ஸ்மார்ட்போன் பிளாக் மற்றும் ஐஸ் என இரண்டு விதமான நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 29 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. புதிய நோக்கியா ஸ்மார்ட்போனிற்கான முன்பதிவு ஏற்கனவே துவங்கி விட்டது. விற்பனை நவம்பர் 8 ஆம் தேதி துவங்குகிறது.