ரெட்மி ஸ்மார்ட்போனுக்கு திடீர் விலை குறைப்பு - எவ்வளவு தெரியுமா?
- ரெட்மி 12 5ஜி ஸ்மார்ட்போன் மூன்று வேரியண்ட்களில் கிடைக்கிறது.
- இந்த ஸ்மார்ட்போன் மூன்றுவித நிற ஆப்ஷன்களில் கிடைக்கிறது.
சியோமி நிறுவனம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இந்திய சந்தையில் ரெட்மி 12 5ஜி ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது. புதிய ஸ்மார்ட்போனின் பேஸ் மாடல் விலை ரூ. 11 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டது. தற்போது இந்த ஸ்மார்ட்போனிற்கு அமேசான் வலைதளத்தில் ரூ. 1250 வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது.
அதன்படி ரெட்மி 12 5ஜி ஸ்மார்ட்போன் தற்போது ரூ. 10 ஆயிரம் பட்ஜெட்டில் கிடைக்கிறது. ரெட்மி 12 5ஜி ஸ்மார்ட்போனின் 4 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் ரூ. 11 ஆயிரத்து 999 என்றும் 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் ரூ. 12 ஆயிரத்து 499 என்றும் 8 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி மாடல் ரூ. 14 ஆயிரத்து 499 விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.
தற்போது அமேசான் வலைதளத்தில் இந்த ஸ்மார்ட்போனின் 4 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடலுக்கு ரூ. 1250 தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதன் மூலம் ரெட்மி 12 5ஜி ஸ்மார்ட்போனின் விலை ரூ. 10 ஆயிரத்து 749 என மாறி இருக்கிறது.
இத்துடன் தேர்வு செய்யப்பட்ட கிரெடிட் கார்டு பயன்படுத்தும் போது ரூ. 750 உடனடி தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதை சேர்க்கும் போது ஸ்மார்ட்போனின் விலை ரூ. 9 ஆயிரத்து 999 என மாறிவிடும். இந்திய சந்தையில் ரெட்மி 12 5ஜி ஸ்மார்ட்போன் சில்வர், புளூ மற்றும் பிளாக் நிறங்களில் கிடைக்கிறது.