வெளியீட்டுக்கு தயாராகும் விவோ ஸ்மார்ட்போன் - எந்த மாடல்?
- விவோ ஸ்மார்ட்போன் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
- இந்த ஸ்மார்ட்போன் 44 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டிருக்கும் என தகவல்.
விவோ நிறுவனம் தனது முற்றிலும் புதிய T3 5ஜி ஸ்மார்ட்போன் மார்ச் 21-ம் தேதி இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்படும் என்று அறிவித்து இருக்கிறது. முன்னதாக இந்த ஸ்மார்ட்போனிற்கான டீசர்களை விவோ நிறுவனம் வெளியிட்டு வந்தது. அந்த வரிசையில் தற்போது வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
இதுவரை வெளியாகி இருக்கும் டீசர்களின் படி விவோ T3 5ஜி ஸ்மார்ட்போனில் ஃபிளாட் ஸ்கிரீன், சிறப்பான கேமரா சென்சார்கள், ஸ்டீரியோ ஸ்பீக்கர் உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்படும் என்று தெரியவந்துள்ளது. முந்தைய தகவல்களில் இந்த ஸ்மார்ட்போனின் அம்சங்கள் ஐகூ Z7 5ஜி மாடலில் இருந்ததை போன்றே வழங்கப்படும் என்று கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.
புதிய விவோ T3 5ஜி மாடலில் 6.67 இன்ச் FHD+ 120Hz AMOLED ஸ்கிரீன், அதிகபட்சம் 1800 நிட்ஸ் பிரைட்னஸ், மீடியாடெக் டிமென்சிட்டி 7200 பிராசஸர், 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி, 50MP சோனி IMX882 சென்சார், 2MP பொக்கெ லென்ஸ், 16MP செல்ஃபி கேமரா வழங்கப்படும் என்று தெரிகிறது.
இத்துடன் 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 44 வாட் ஃபிளாஷ் சார்ஜ் வசதி, டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், மைக்ரோ எஸ்.டி. கார்டு ஸ்லாட், மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி, 10 5ஜி பேன்ட்களுக்கான சப்போர்ட், IP54 தர வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டன்ட் போன்ற அம்சங்கள் வழங்கப்படலாம்.
புதிய விவோ T3 5ஜி ஸ்மார்ட்போன் க்ரிஸ்டல் ஃபிளேக் மற்றும் காஸ்மிக் புளூ என இரண்டு நிறங்களில் கிடைக்கும் என்று தெரிகிறது. இத்துடன் பின்புறத்தில் பிரத்யேக டிசைன் பேட்டன்கள் வழங்கப்பட்டு இருக்கும் என்று கூறப்படுகிறது.