மிட் ரேஞ்ச் பிரிவில் புது விவோ ஸ்மார்ட்போன் அறிமுகம் - என்ன ஸ்பெஷல் தெரியுமா?
- ஏற்கனவே விற்பனை செய்யப்படும் V29e மாடலின் மேம்பட்ட வெர்ஷன்.
- ஆண்ட்ராய்டு 14 சார்ந்த பன்டச் ஒ.எஸ். 14 உள்ளது.
விவோ நிறுவனத்தின் V30e ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. மிட் ரேஞ்ச் பிரிவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய விவோ V30e ஸ்மார்ட்போன் அந்நிறுவனம் ஏற்கனவே விற்பனை செய்து வரும் V29e மாடலின் மேம்பட்ட வெர்ஷன் ஆகும்.
புதிய விவோ V30e ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 6 ஜென் 1 பிராசஸர், 6.78 இன்ச் Full HD+ கர்வ்டு AMOLED டிஸ்ப்ளே, 120Hz ரிப்ரெஷ் ரேட், பன்ச் ஹோல் கட்அவுட், அட்ரினோ GPU கிராஃபிக்ஸ், 8 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி, மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி, 5500 எம்.ஏ.ஹெச். பேட்டரி போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கிறது.
புகைப்படங்களை எடுக்க விவோ V30e மாடலில் 50MP பிரைமரி கேமரா, 8MP அல்ட்ரா வைடு லென்ஸ், ஆரா லைட் அம்சம், 50MP செல்ஃபி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு 14 சார்ந்த பன்டச் ஒ.எஸ். 14 வழங்கப்பட்டு இருக்கிறது.
கனெக்டிவிட்டிக்கு 5ஜி, 4ஜி எல்.டி.இ., டூயல் பேண்ட் வைபை, ப்ளூடூத், ஜி.பி.எஸ்., யு.எஸ்.பி. டைப் சி போர்ட் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார் வழங்கப்பட்டு இருக்கிறது.
இந்திய சந்தையில் விவோ V30e ஸ்மார்ட்போன் வெல்வெட் ரெட் மற்றும் சில்வர் புளூ நிறங்களில் கிடைக்கிறது. இதன் 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 27 ஆயிரத்து 999 என்றும் 8 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 29 ஆயிரத்து 999 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
இந்த ஸ்மார்ட்போன் வாங்குவோர் எஸ்.பி.ஐ. மற்றும் ஹெச்.டி.எஃப்.சி. வங்கி கார்டுகளை பயன்படுத்தும் போது ரூ. 3 ஆயிரம் வரை உடனடி தள்ளுபடி, ஆறு மாதங்களுக்கு வட்டியில்லா மாத தவணை முறை வசதி, ரூ. 2 ஆயிரத்து 500 வரை எக்சேஞ்ச் போனஸ் உள்ளிட்ட சலுகைகள் வழங்கப்படுகிறது.