விம்பிள்டன் டென்னிஸ்: 4வது சுற்றுக்கு முன்னேறினர் அல்காரஸ், சின்னர்
- விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடந்து வருகிறது.
- இத்தாலி வீரர் ஜானிக் சின்னர், அல்காரஸ் ஆகியோர் வெற்றி பெற்றனர்.
லண்டன்:
ஒவ்வொரு ஆண்டும் 4 வகையான கிராண்ட்ஸ்லாம் என்ற உயரிய அந்தஸ்து பெற்ற டென்னிஸ் போட்டிகள் நடத்தப்படுகின்றன.
இதில் மிகவும் கவுரவமிக்கதாகக் கருதப்படும் விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடைபெற்று வருகிறது.
இந்த தொடரில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் இத்தாலி வீரர் ஜானிக் சின்னர், செர்பியா வீரர் மியோமிர் உடன் மோதினார்.
பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ஆரம்பம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சின்னர் 6-1, 6-4, 6-2 என்ற செட் கணக்கில் வென்று 4-வது சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு போட்டியில் ஸ்பெயின் வீரர் கார்லோஸ் அல்காரஸ், அமெரிக்காவின் பிரான்சிஸ் தியாபேவை எதிர்கொண்டார். முதல் மற்றும் 3வது செட்டை தியாபே கைப்பற்றினார். சுதாரித்து ஆடிய அல்காரஸ் 2,4 மற்றும் 5வது செட்டை கைப்பற்றினார்.
இறுதியில் அல்காரஸ் 5-7, 6-2, 4-6, 7-6 (7-2), 6-2 என்ற செட் கணக்கில் வென்று 4வது சுற்றுக்கு முன்னேறினார்.