டென்னிஸ்

அவரை எதிர்த்து ஆடியது அற்புதமான தருணம் - ஜோகோவிச்சை புகழ்ந்த அல்காரஸ்

Published On 2023-07-16 21:25 GMT   |   Update On 2023-07-16 21:25 GMT
  • அல்காரஸ் பெறும் இரண்டாவது கிராண்ட்சிலாம் பட்டம் இதுவாகும்.
  • ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரஸ் தரவரிசை பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.

லண்டன்:

விம்பிள்டன் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் இறுதிப்போட்டியில், செர்பியாவின் ஜோகோவிச்சை 1-6, 7-6 (8-6), 6-1, 3-6, 6-4 என்ற செட்களில் வீழ்த்தி ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரஸ் சாம்பியன் பட்டம் வென்றார்.

20 வயதில் சாம்பியன் பட்டம் வென்ற அல்காரஸ், விம்பிள்டன் கோப்பைக்கு முத்தமிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

இதன்மூலம் விம்பிள்டனில் ஜோகோவிச்சின் தொடர் வெற்றிக்கு அல்காரஸ் முற்றுப்புள்ளி வைத்துள்ளார். இவர் ஏற்கனவே அமெரிக்க ஓபன் சாம்பியன் பட்டமும் வென்றுள்ளார்.

சாம்பியன் பட்டம் வென்ற கார்லோஸ் அல்காரசுக்கு 24.50 கோடி ரூபாய் பரிசுத்தொகை வழங்கப்பட்டது. இரண்டாவது இடம் பிடித்த ஜோகோவிச்சுக்கு 12.25 கோடி ரூபாய் கிடைத்தது.

இந்நிலையில், வெற்றி பெற்ற அல்காரஸ் பேசுகையில், ஜோகோவிச்சை எதிர்த்து ஆடியது அற்புதமான தருணம். அவரைப் பார்த்து தான் டென்னிஸ் விளையாட தொடங்கினேன். நான் பிறந்த காலகட்டத்திலேயே பல பட்டங்களை அவர் வென்றுள்ளார். அவரை வீழ்த்தியது மகிழ்ச்சி அளிக்கிறது என தெரிவித்தார்.

தோல்விக்கு பிறகு ஜோகோவிச் பேசுகையில், வெற்றி பெற்ற அல்காரசுக்கு வாழ்த்துக்கள். சிறப்பான வீரரிடம் தோல்வி அடைந்துள்ளேன். தாம் தோற்க வேண்டிய பல சாம்பியன் பட்டங்களை வென்று இருப்பதால், இன்று வெல்ல வேண்டியதை தோற்றுவிட்டேன், இதனால் இரண்டும் சமம் ஆகிவிட்டது என தெரிவித்தார்.

Tags:    

Similar News