டென்னிஸ்

ஸ்வீடிஷ் ஓபன் டென்னிஸ்: நடாலை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார் போர்ச்சுகல் வீரர்

Published On 2024-07-21 14:50 GMT   |   Update On 2024-07-21 14:50 GMT
  • ஸ்வீடிஷ் ஓபன் டென்னிஸ் தொடர் ஸ்வீடனில் நடந்து வருகிறது.
  • ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ரபேல் நடால் இறுதிப்போட்டியில் தோற்றார்.

பாஸ்தாத்:

ஸ்வீடிஷ் ஓபன் டென்னிஸ் தொடர் ஸ்வீடனில் நடைபெற்றது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிச்சுற்று நடைபெற்றது.

இன்று நடந்த போட்டியில் ஸ்பெயினின் ரபேல் நடால், போர்ச்சுகல் வீரர் நியுனோ போர்ஜஸ் உடன் மோதினார்.

இதில் போர்ஜஸ் 6-3, 6-2 என்ற நேர் செட் கணக்கில் எளிதில் வென்று சாம்பியன் பட்டம் வென்றார்.

Tags:    

Similar News