டென்னிஸ்

ஸ்வீடிஷ் ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் இந்திய வீரர் சுமித் நாகல் வெற்றி

Published On 2024-07-16 15:50 GMT   |   Update On 2024-07-16 15:50 GMT
  • ஸ்வீடிஷ் ஓபன் டென்னிஸ் தொடர் ஸ்வீடனில் நடந்து வருகிறது.
  • ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் சுமித் நாகல் வென்றார்.

பாஸ்தாத்:

ஸ்வீடிஷ் ஓபன் டென்னிஸ் தொடர் ஸ்வீடனில் நடைபெற்று வருகிறது.

இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில் இந்தியாவின் சுமித் நாகல், ஸ்வீடனின் எலியாஸ் ஒய்மெர் ஆகியோர் மோதினர்.

இதில் சுமித் நாகல் 6-4, 6-3 என்ற செட் கணக்கில் வென்று இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார்.

நாளை மறுதினம் நடைபெறும் அடுத்த சுற்றில் இந்திய வீரர் சுமித் நாகல் அர்ஜென்டினா வீரர் மரியானோ நவோனுடன் மோத உள்ளார்.

Tags:    

Similar News