search icon
என் மலர்tooltip icon

    ஆட்டோ டிப்ஸ்

    இந்தியாவில் புது G 310 RR வினியோகத்தை துவங்கிய பிஎம்டபிள்யூ
    X

    இந்தியாவில் புது G 310 RR வினியோகத்தை துவங்கிய பிஎம்டபிள்யூ

    • பிஎம்டபிள்யூ நிறுவனம் சமீபத்தில் தான் புதிய G 310 RR மோட்டார்சைக்கிளை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது.
    • இது அபாச்சி RR 310 மாடலின் ரிபேட்ஜ் செய்யப்பட்ட மாடல் ஆகும்.

    பிஎம்டபிள்யூ மோட்டராட் நிறுவனம் புதிய G 310 RR மோட்டார்சைக்கிள் இந்திய வினியோகத்தை துவங்கி உள்ளது. இந்த மோட்டார்சைக்கிள் ஏற்கனவே விற்பனை செய்யப்பட்டு வரும் டிவிஎஸ் அபாச்சி RR 310 மோட்டார்சைக்கிளின் ரிபேட்ஜ் செய்யப்பட்ட வெர்ஷன் ஆகும். இதன் விலை இந்தியாவில் ரூ. 3 லட்சத்து 85 ஆயிரம் என துவங்குகிறது.

    இந்த மோட்டார்சைக்கிள் ஒற்றை வேரியண்ட், ஸ்டாண்டர்டு மற்றும் ஸ்டைல் ஸ்போர்ட் என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது. இதன் ஸ்டாண்டர்டு பெயிண்ட் ஆப்ஷனில் பிளாக் ஸ்டாம் மெட்டாலிக் ஷேட் கொண்டிருக்கிறது. பிரீமியம் ஸ்டைல் ஸ்போர்ட் மாடலில் ரேசிங் புளூ மெட்டாலிக் மற்றும் ரேசிங் ரெட் நிறம் உள்ளது.


    இரு நிறங்களின் விலை முறையே ரூ. 3 லட்சத்து 85 ஆயிரம் மற்றும் ரூ. 3 லட்சத்து 99 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இரு மாடல்களின் ஒற்றை வித்தியாசம் அதன் நிறங்கள் மட்டுமே. மற்றப்படி ஹார்டுவேர், அம்சங்கள் மற்றும் மெக்கானிக்கல் உபகரணங்கள் உள்ளிட்டவை இரு மாடல்களிலும் ஒரே மாதிரியே வழங்கப்பட்டு இருக்கிறது.

    பிஎம்டபிள்யூ G 310 RR மோட்டார்சைக்கிளில் ஃபுல் எல்இடி லைட்டிங், 5 இன்ச் கலர் டிஎப்டி டிஸ்ப்ளே, ப்ளூடூத் கனெக்டிவிட்டி, ரைடு பை வயர் திராட்டில், நான்கு வித ரைடிங் மோட்கள், டூயல் சேனல் ஏபிஎஸ் மற்றும் ரியர் வீல் லிப்ட் ஆப் ப்ரோடெக்‌ஷன் போன்ற அம்சங்கள் உள்ளது.

    மெக்கானிக்கல் அம்சங்களை பொருத்தவரை இந்த மாடலில் 313சிசி, சிங்கில் சிலிண்டர், லிக்விட் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் டிராக் மற்றும் ஸ்போர்ட்ஸ் மோட்களில் 33.5 ஹெச்பி பவர், 27.3 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. ரெயின் மற்றும் அர்பன் மோட்களில் செயல்திறன் 25.4 ஹெத்பி பவர், 25 நியூட்டன் மீட்டர் டார்க் என குறைந்து விடும்.

    Next Story
    ×