search icon
என் மலர்tooltip icon

    ஆட்டோ டிப்ஸ்

    முன்பதிவில் அசத்தும் மாருதி சுசுகி கிராண்ட் விட்டாரா
    X

    முன்பதிவில் அசத்தும் மாருதி சுசுகி கிராண்ட் விட்டாரா

    • மாருதி சுசுகி நிறுவனத்தின் கிராண்ட் விட்டாரா மாடல் இந்திய முன்பதிவில் புது மைல்கல் எட்டி அசத்தி உள்ளது.
    • இந்த காரின் வினியோகம் அடுத்த மாதம் துவங்கும் என எதிர்பார்க்கலாம்.

    மாருதி சுசுகி நிறுவனம் இந்திய சந்தையில் புதிய கிராண்ட் விட்டாரா மாடலை இம்மாத துவக்கத்தில் அறிமுகம் செய்து இருந்தது. அறிமுகம் செய்யப்பட்டதை தொடர்ந்து நாடு முழுக்க இயங்கி வரும் நெக்சா விற்பனை மையங்களில் புது கிராண்ட் விட்டாரா வரத் தொடங்கி உள்ளது.

    இந்த மாடலுக்கான முன்பதிவு துவங்கி நடைபெற்று வரும் நிலையில், டெஸ்ட் டிரைவ்களும் விரைவில் துவங்க இருக்கிறது. இந்த நிலையில், புதிய கிராண்ட் விட்டாரா காரை வாங்க இதுவரை சுமார் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் முன்பதிவு செய்து இருப்பதாக மாருதி சுசுகி நிறுவனம் அறிவித்து இருக்கிறது.


    வெளியீட்டை தொடர்ந்து இந்த காரின் வினியோகம் செப்டம்பர் மாதத்திலேயே துவங்கும் என எதிர்பார்க்கலாம். டொயோட்டா நிறுவனம் கிராண்ட் விட்டாரா காரின் ரிபேட்ஜ் செய்யப்பட்ட மாடலாக அர்பன் குரூயிசர் காரை இந்த மாதம் 16 ஆம் தேதி அறிமுகம் செய்ய திட்டமிட்டு இருந்தது.

    எனினும், திடீரென இந்த காரின் வெளியீட்டு தேதி மாற்றப்பட்டு விட்டது. அந்த வகையில் புதிய டொயோட்டா ஹைரைடர் மாடலும் செப்டம்பர் மாதத்திலேயே வெளியாக இருக்கிறது. டொயோட்டா ஹைரைடர் மாடலுக்கான முன்பதிவும் துவங்கி நடைபெற்று வருகிறது. வெளியீட்டை தொடர்ந்து இந்த காரின் வினியோகமும் செப்டம்பர் மாதத்திலேயே துவங்கும் என எதிர்பார்க்கலாம்.

    டொயோட்டா நிறுவனம் புதிய ஹைரைடர் மற்றும் கிராண்ட் விட்டாரா மாடல்களை பெங்களூருவில் உள்ள பிடாடி ஆலையில் உற்பத்தி செய்ய இருக்கிறது. இரு கார்களிலும் 1.5 லிட்டர் K15C பெட்ரோல் மைல்டு ஹைப்ரிட் மற்றும் 1.5 லிட்டர் TNGA பெட்ரோல் ஸ்டிராங் ஹைப்ரிட் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது.

    Next Story
    ×