என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
பைக்
ரூ. 12 லட்சம் பட்ஜெட்டில் புது பைக் இந்தியாவில் அறிமுகம்
- டிரையம்ப் மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனத்தின் புதிய போன்வில் ஸ்பீடுமாஸ்டர் மாடலை மூன்று நிறங்களில் கிடைக்கிறது.
- புது மாடலில் ஸ்டைலிங் தவிர வேறு எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை.
L மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம் 2023 போன்வில் ஸ்பீடுமாஸ்டர் மோட்டார்சைக்கிள் மாடலை இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்து இருக்கிறது. இதன் துவக்க விலை ரூ. 12 லட்சத்து 05 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது. புதிய பெயிண்ட் மூலம் ஸ்டைலிங் மாற்றங்கள் தவிர இந்த மாடலில் வேறு எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை.
இந்திய சந்தையில் புதிய போன்வில் ஸ்பீடுமாஸ்டர் - ஜெட் பிளாக், சபையர் பிளாக், பியுஷன் வைட் மற்றும் கார்டோவன் ரெட் என மூன்று விதமான நிறங்களில் கிடைக்கிறது. இவற்றில் ஜெட் பிளாக் மற்றும் கார்டோவன் ரெட் நிறங்கள் சிங்கில் டோன் பினிஷ், சபையர் பிளாக் பியுஷன் வைட் டூயல் டோன் பினிஷ் கொண்டுள்ளது.
விலை விவரங்கள்:
- டிரையம்ப் போன்வில் ஸ்பீடுமாஸ்டர் ஜெட் பிளாக் ரூ. 12 லட்சத்து 05 ஆயிரம்
- டிரையம்ப் போன்வில் ஸ்பீடுமாஸ்டர் கார்டோவன் ரெட் ரூ. 12 லட்சத்து 18 ஆயிரம்
-டிரையம்ப் போன்வில் ஸ்பீடுமாஸ்டர் சபையர் பிளாக் பியுஷன் வைட் ரூ. 12 லட்சத்து 35 ஆயிரம்
அனைத்து விலைகளும் எக்ஸ் ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
2023 டிரையம்ப் போன்வில் ஸ்பீடுமாஸ்டர் மோட்டார்சைக்கிள் வட்ட வடிவ ஹெட்லேம்ப், க்ரோம் பில்லர் கேப் கொண்ட டியர் டிராப் வடிவ பியூவல் டேன்க், ஸ்ப்லிட் ஸ்டைல் சீடர்கள், எக்சாஸ்ட் கேனிஸ்டரில் ஸ்லாஷ் கட் டிசைன், வயர் ஸ்போக் வீல்களை கொண்டுள்ளது.
இந்த மாடலில் 1200 சிசி, பேரலல் ட்வின் சிலிண்டர் லிக்விட் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 76.9 ஹெச்பி பவர், 106 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு இருக்கிறது.
இந்திய சந்தையில் புதிய டிரையம்ப் போன்வில் ஸ்பீடுமாஸ்டர் மோட்டார்சைக்கிள் ஹார்லி டேவிட்சன் நைட்ஸ்டர் மாடலுக்கு போட்டியாக அமைகிறது.