search icon
என் மலர்tooltip icon

    பைக்

    உற்பத்தியில் புது மைல்கல் - அசத்தும் டிவிஎஸ் ஐகியூப்
    X

    உற்பத்தியில் புது மைல்கல் - அசத்தும் டிவிஎஸ் ஐகியூப்

    • டிவிஎஸ் நிறுவனத்தின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல் ஐகியூப் இந்திய உற்பத்தியில் அசத்தி வருகிறது.
    • அமோக வரவேற்பு இல்லை என்ற போதிலும் இந்த மாடல் கணிசமான விற்பனையை பதிவு செய்து வருகிறது.

    டிவிஎஸ் நிறுவனம் சமீபத்தில் தனது ஐகியூப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை இந்திய சந்தையில் அப்டேட் செய்தது. புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட ஐகியூப் மாடல் இந்தியாவில் கணிசமான விற்பனையை பதிவு செய்து வருகிறது. ஐகியூப் மாடல் தொடர்ந்து வரவேற்பை பெற பல்வேறு காரணங்கள் இருந்த போதிலும், புது வேரியண்ட் அறிமுகம் செய்யப்பட்டு இருப்பது மிக முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

    ஐகியூப் மாடலின் புது வேரியண்ட் வாடிக்கையாளர் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் ஏராளமான ஆப்ஷன்களை வழங்குகிறது. இத்துடன் இதன் பேஸ் வேரியண்ட் தற்போது அதிக ரேன்ஜ் வழங்குகிறது. எனினும், இதன் விலை அதிகளவு மாற்றம் இன்றி நிர்ணயம் செய்யப்பட்டு இருப்பது சந்தையில் போட்டியை பலப்படுத்தி இருக்கிறது.


    எலெக்ட்ரிக் வாகன சந்தையில் எதிர்கால திட்டமிடல் உடன் கடந்த ஆண்டு ரூ. 1000 கோடி முதலீடு செய்தது. இதைத் தொடர்ந்து மீண்டும் ரூ. 1000 கோடி முதலீடு செய்து புது வாகனங்கள் மூலம் எலெக்ட்ரிக் மயமாக்கலை நீட்டிக்க டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளது. ஜூன் 2022 மாதத்தில் மட்டும் டிவிஎஸ் நிறுவனம் 4 ஆயிரத்து 667 ஐகியூப் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை உற்பத்தி செய்து இருந்தது.

    இது மே மாதத்தில் உற்பத்தி செய்யப்பட்ட 2 ஆயிரத்து 030 யூனிட்களை விட அதிகம் ஆகும். அந்த வகையில் டிவிஎஸ் நிறுவனம் உற்பத்தியில் 77 சதவீத வளர்ச்சியை பதிவு செய்து இருக்கிறது. மேலும் இந்த ஆண்டு இறுதிக்குள் மாதாந்திர வாகன உற்பத்தியில் 20 ஆயிரம் யூனிட்களை அடைய டிவிஎஸ் நிறுவனம் இலக்கு நிர்ணயம் செய்துள்ளது.

    Next Story
    ×