search icon
என் மலர்tooltip icon

    கார்

    அடுத்த மாதம் இந்தியா வரும் ஆடி A8 L பேஸ்லிப்ட்
    X

    அடுத்த மாதம் இந்தியா வரும் ஆடி A8 L பேஸ்லிப்ட்

    • ஆடி நிறுவனத்தின் மேம்பட்ட A8 L மாடல் இந்திய சந்தையில் அறிமுகமாகிறது.
    • இதே மாடல் பிப்ரவரி மாத வாக்கில் சர்வதேச சந்தையில் அறிமுகமானது.

    ஆடி நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் 2022 ஆடி A8 L பேஸ்லிப்ட் மாடல் இந்திய சந்தையில் ஜூலை 12 ஆம் தேதி அறிமுகமாகிறது. புதிய ஆடி A8 L ஃபிளாக்‌ஷிப் செடான் மாடல் நீண்ட வீல்பேஸ் கொண்டுள்ளது. ஆடி இந்தியா நிறுவனம் புதிய A8 L ஃபேஸ்லிப்ட் மாடலுக்கான முன்பதிவு மே மாதம் துவங்கியது. முன்பதிவு கட்டணம் ரூ. 10 லட்சம் ஆகும்.

    முன்னதாக புதிய ஆடி A8 L பேஸ்லிப்ட் மாடலுக்கான டீசரை ஆடி இந்திய ஏப்ரல் மாத வாக்கில் வெளியிட்டு இருந்தது. 2022 பிப்ரவரி மாத வாக்கில் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்ட 2022 ஆடி A8 L ஃபேஸ்லிப்ட் மாடல் மிக விரைவில் இந்திய சந்தையில் வெளியிடப்பட இருப்பது குறிப்பிடத்தக்கது.


    2022 ஆடி A8 L பேஸ்லிப்ட் மாடலில் 3 லிட்டர் TFSI V6 என்ஜின் மற்றும் 48 வோல்ட் மைல்டு ஹைப்ரிட் சிஸ்டம் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 340 ஹெச்.பி. பவர், 500 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது. இத்துடன் 8 ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன், குவாட்ரோ ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் வழங்கப்பட்டு இருக்கிறது.

    இந்த என்ஜின் மட்டுமின்றி 4 லிட்டர் TFSI என்ஜின் ஆப்ஷனாக வழங்கப்படும் என கூறப்படுகிறது. இந்த என்ஜின் 460 ஹெச்.பி. பவர், 660 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டது ஆகும்.

    Next Story
    ×